ஊட்டியில் இருந்து திரும்பிய சுற்றுலா வாகனம் கோத்தகிரி வழியில் விபத்து..!

ஊட்டியில் சுற்றுலாவை முடித்துவிட்டு கோத்தகிரி வழியாக வரும்போது, வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சிக்கிய விபத்தில் 15 குழந்தைகள் உட்பட 31 பேர் படுகாயமடைந்தனர்.


கோவை : சென்னை பகுதியை சேர்ந்தவர்கள் 31 நபர்கள் கடந்த 3 நாட்களுக்கு முன்பு சென்னையில் இருந்து ரயில் மூலம் மேட்டுப்பாளையம் வந்தடைந்தனர். மேட்டுப்பாளையத்தில் இருந்து வாடகைக்கு மினி பேருந்து எடுத்து இரண்டு நாள் உதகைக்கு சுற்றுலா சென்றனர்.



இந்நிலையில், சுற்றுலாவை முடித்துவிட்டு கோத்தகிரி வழியாக வரும்போது பவானிசாகர் வியூ பாயிண்ட் பகுதியில் மினி பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் 16 பெரியோர்கள் மற்றும் 15 குழந்தைகள் காயமடைந்தனர். பின்னர், உடனடியாக அவசர சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மேலும் படுகாயம் அடைந்தவர்களை அவசர சிகிச்சைக்காக 10-க்கும் மேற்பட்டோரை கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். கோவை அரசு மருத்துவமனையில் விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...