கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு..!

கோவை IOGKO & KENKO- MARTIAL ARTS ACADEMY யில் பயிற்சி பெறும் மாணவ, மாணவிகள் மும்பையில் நடைபெற்ற UGKF ALL INDIA GOJURYU karate championshipல் 18 பதக்கங்கள் வென்று கோவைக்கு மேலும் பெருமையை சேர்த்துள்ளனர்.


Coimbatore: கோவை நகரில் IOGKO & KENKO- MARTIAL ARTS ACADEMY யில் பயிற்சி பெறும் மாணவ, மாணவிகள் கராத்தே தகுதி பெற்று மும்பையில் நடைபெற்ற UGKF ALL INDIA GOJURYU karate championship போட்டியில் கலந்து கொண்டு, ஐந்து தங்கம், ஒன்பது வெள்ளி மற்றும் நான்கு வெண்கலம் உள்பட மொத்தம் 18 பதக்கங்கள் வென்று கோவைக்கு பெருமையை சேர்த்துள்ளனர்.




பயிற்சியாளர் பிரமோஸ் மற்றும் விஜயனின் தலைமையில் இவர்கள் அதனை சாதித்துள்ளனர். போட்டி முடிந்து நேற்று இரவு கோவை திரும்பிய போது, ரயில் நிலையத்தில் மாணவ, மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.




மேலும் அடுத்த மாதம் புனே நகரில் நடைபெற உள்ள AGKF ASIAN GOJU RYU CHAMPIONSHIP ஆசிய கோ ஜூரியோ கராத்தேப்போட்டிக்கு இந்த வீரர்கள் தேர்வாகி உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...