கணபதிபாளையத்தில் உள்ள கல்குவாரியில் வெடிப்பொருட்கள் பதுக்கல் – இரண்டு பேர் கைது

ல்குவாரியில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 950 எலக்ட்ரிக் டெனட்டர்கள், 350 ஜெலடின் குச்சிகள் உள்ளிட்ட 1300 வெடி பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் தளபதி மற்றும் ராமசாமி என்ற இருவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் கல் குவாரியில் இயங்கி வருகிறது. இதில் சில கல் குவாரிகள் அனுமதி இன்றி செயல்பட்டு வருகிறது. தொடர்ந்து இப்பகுதியில் இருந்து உரிய அனுமதி இல்லாமல் கேரள மாநிலத்திற்கு கனிம வளங்கள் கடத்தப்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் கல்குவாரிகளில் ஜெலட்டின் மற்று எலக்ட்ரிக் டெனரேட்டர் போன்ற வெடி பொருட்களைக் கொண்டு கற்கள் வெட்டி எடுக்கப்படுகிறது.



இந்தநிலையில், பொள்ளாச்சி அருகே உள்ள கணபதிபாளையம் பகுதியில் உரிய அனுமதியின்றி வெடிப்பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக ஆனைமலை போலீசாருக்கு வந்த ரகசிய தகவலை அடுத்து அங்கு விரைந்த போலீசார் சோதனையிட்ட போது தளபதி (70) என்பவருக்கு சொந்தமான கல்குவாரி தோட்டத்தில் ஜெலடின் குச்சிகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

இதனையடுத்து அங்கிருந்த 950 எலக்ட்ரிக் டெனட்டர்கள், 350 ஜெலடின் குச்சிகள் உள்ளிட்ட 1300 வெடி பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் தளபதி மற்றும் ராமசாமி என்ற இருவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...