திமுக நிர்வாகிகள் மற்றும் செயல் வீரர்களுக்கு நன்றி கூறிய கோவை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார்

மக்களவை தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய நிர்வாகிகள், செயல்வீரர்கள் என அனைவரையும் வரவேற்று, கோவை பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் நன்றி கூறி பாராட்டி மகிழ்ந்தார்.


கோவை: கோவை வடக்கு மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பில், ஒன்றிய கழக செயலாளர் C.M.கிருஷ்ணகுமார் ஏற்பாட்டில், தடாகம் சாலையில் உள்ள சி.எம்.கே ஹாலில், நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் சிறப்பாக பணியாற்றிய நிர்வாகிகள், செயல்வீரர்கள் அனைவரையும் வரவேற்று, கோவை பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் இன்று (மே.4) சந்தித்து நன்றி கூறி பாராட்டி மகிழ்ந்தார்.



உடன் கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, தலைமை செயற்குழு உறுப்பினர் T.P.சுப்பிரமணியன், மாவட்ட துணை செயலாளர் அசோக் பாபு, MNK.செந்தில், ஆனைகட்டி மதன், நெசவாளர் அணி அமைப்பாளர் நட்ராஜ், இளைஞர் அணி சூரியன் தம்பி, மனோஜ் மற்றும் கழக நிர்வாகிகள் பலரும் இருந்தனர்.

இதேபோல், கவுண்டம்பாளையம் பகுதி கழகம் சார்பில், துடியலூர் பகுதி கழக அலுவலகத்தில், பகுதி கழக செயலாளர் சரத் விக்னேஷ் ஏற்பாட்டில், நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பகுதிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் சிறப்பாக பணியாற்றிய நிர்வாகிகள், செயல்வீரர்கள் அனைவரையும் இன்று (மே.4) சந்தித்து கோவை பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் நன்றி கூறி பாராட்டி மகிழ்ந்தார்.



உடன் கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, தலைமை செயற்குழு உறுப்பினர் T.P.சுப்பிரமணியன், மாவட்ட துணை செயலாளர் அசோக் பாபு, முன்னாள் நகராட்சி தலைவர் சுந்தரம், இளைஞரணி மனோஜ், வட்டக் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பலரும் இருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...