கோவையில் போதை ஆசாமிகள் தகராறு - இரு வீதி ஆண்களும், பெண்களும் மோதல்

பொங்கி அம்மாள் வீதியில், தயரிட்டேரி மற்றும் கக்கன் வீதிகளை சேர்ந்த இரண்டு தரப்பு மக்களும் காவல்துறை முன்னிலையில் கற்கள் மற்றும் கட்டைகளை வீசி ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை சிவானந்தா காலனி, ரத்தினபுரி பகுதியில் உள்ள பொங்கி அம்மாள் வீதியில் இரவு நேரங்களில் அங்கு உள்ள ஒரு வீட்டின் அருகே போதை ஆசாமிகள், கஞ்சா மற்றும் மது குடிப்பது வழக்கம். இந்நிலையில் நேற்று மே.3 இரவு தயரிட்டேரி மற்றும் கக்கன் வீதியைச் சேர்ந்த சிலர், அங்கு வந்து அமர்ந்து மது அருந்தி கொண்டு இருந்தனர். அதில் ஒருவரின் மனைவி கணவனை அழைக்க வந்து உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கணவன் மது அருந்துவதை பார்த்த அவர், என்ன என் கணவரை மது அருந்த கற்றுக் கொடுக்கிறீர்கள்? என்று கேள்வி எழுப்பினார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் கணவன்–மனைவி இருவரையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த தகவல் அறிந்து அந்த இரண்டு பகுதியைச் சேர்ந்த பெண்கள் மற்றும் ஆண்கள், பொங்கி அம்மாள் வீதிக்கு வந்து கற்கள், கட்டைகளை வீசி ஒருவரை, ஒருவர் மாறி, மாறி தாக்கி கொண்டனர்.



நள்ளிரவில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இது குறித்து தகவல் அறிந்து வந்த ரத்தினபுரி காவல் துறையினர் இருதரப்பினரையும் சமாதானம் செய்ய முயன்றனர். ஆனால், காவல்துறை வந்து சமாதானப்படுத்தியதை பொருட்படுத்தாமல் இரு தரப்பினர் மாறி, மாறி மோதி கொண்ட சம்பவம் அரங்கேறியது.

இரு வீதிகளைச் சேர்ந்த இரு தரப்பினர் இடையே கடும் சண்டையில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.மேலும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகிய வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...