கோவை மாநகராட்சி சார்பில் சிங்காநல்லூர் சிக்னலிலும் பசுமை பந்தல் அமைப்பு - மக்கள் மகிழ்ச்சி

கண்ணப்பன் நகரை தொடர்ந்து சிங்காநல்லூர் போலீஸ் ஸ்டேஷன், வசந்த் அண்ட் கோ அருகே உள்ள சிக்னலிலும் பசுமை பந்தல் இன்று அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


கோவை: வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில்,கோவையில் சிக்னல்களில் பசுமைப்பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி சிங்காநல்லூர் சிக்னலிலும் இந்த பசுமைப்பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. பல்வேறு மாவட்டங்களிலும் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டிவெப்பம் பதிவாகி மக்களை வாட்டி வதைத்து வருகிறது.



இந்த நிலையில் கோவை கடந்த சில ஆண்டுகளாகவே 'ஹாட்டாக' இருந்து வந்தது. இந்தாண்டு இன்னும் உக்கிரமாக 100 டிகிரி -பாரன்ஹீட் வெப்பம் சர்வ சாதாரணமாக கோவை மக்களை வெளுத்து வாங்கி வருகிறது. வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கு அரசு மற்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர், நீர்மோர் பந்தல்களில் மக்கள் தாகம் தணித்து வருகின்றனர்.

வெயிலில் குறிப்பாக வாகன ஓட்டிகள் பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் கோவை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் மாநகராட்சி பகுதிகளில் வெயில் அதிகமாக இருக்கக்கூடிய சிக்னல்களில் வாகன ஓட்டிகளுக்காக பசுமை பந்தல் அமைக்கும் பணியை துவக்கி உள்ளது. கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் கண்ணப்பன் நகர் சிக்னலில் முதல் கட்டமாக இந்த பசுமை பந்தல் அமைக்கப்பட்டது.



முதல் கட்டமாக 10 இடங்களில் இதனை அமைக்க உள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்த நிலையில் சிங்காநல்லூர் போலீஸ் ஸ்டேஷன், வசந்த் அண்ட் கோ அருகே உள்ள சிக்னலில் (சிங்காநல்லூர் சிக்னல்) இந்த பந்தல் தற்போது (மே.4) அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...