தாராபுரத்தில் போக்குவரத்தை சரி செய்த பெண் – வேடிக்கை பார்த்தப்படி சென்ற மக்கள்

கணவன் உடன் சண்டைப்போட்டுவிட்டு வீட்டைவிட்டு வெளியேறிய மனைவி, பொள்ளாச்சி சாலை அமராவதி ரவுண்டானா அருகே போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதிகளில் உள்ள பொள்ளாச்சி சாலை அமராவதி ரவுண்டானா அருகே சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சாலையில் நின்று கொண்டு வரும் வாகனங்களுக்கு இடையூறு இன்றி வாகன ஒட்டிகளுக்கு வாகனங்களை வழிமறித்து போக்குவரத்துக் காவலர் செய்யும் வேலைகளை அனைத்தும் செய்து வாகனங்களை அனுப்பி வைத்தார்.

அதுமட்டுமின்றி வாகனங்களில் செல்பவர்களுக்கு சல்யூட் அடித்து வாகன ஓட்டிகளை வரவேற்றார். தாராபுரம் மகளிர் காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்ட காவலர்கள் உதவியுடன் தாராபுரம் பொள்ளாச்சி சாலையில் அட்ராசிட்டியில் ஈடுபட்ட பெண்ணை தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.



விசாரணையில் தூத்துக்குடியைச் சேர்ந்த ஜோதிகா வயது 25 என்பது தெரிய வந்தது. இந்தப் பெண்ணுக்கு திருமணமான நிலையில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் இதுபோன்று சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்நிலையில் இன்று காலையில் பழனியில் இருந்து தாராபுரத்திற்கு வந்து இதுபோன்று அட்ராசிட்டியில் ஈடுபட்டது தெரியவந்தது. தாராபுரம் பேருந்து நிலையம் மற்றும் அமராவதி சிலை பகுதியில் பொதுமக்கள் நீண்ட நேரம் அப்பெண் செய்யும் செயல்களை வேடிக்கை பார்த்து ரசித்து சென்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...