சவுக்கு சங்கர் கைது: 14 நாள் நீதிமன்ற காவல் - கோவை நீதிமன்ற உத்தரவு

கோவை சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கருக்கு நீதிபதி கோபாலகிருஷ்ணன் 14 நாள் நீதிமன்ற காவல் விதித்துள்ளார். கைது செய்யப்பட்ட நிலையில் அவரது காரில் இருந்து கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.


Coimbatore: கோவை காவல் துறை அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்களை அவதூறாக பேசியதற்காக கோவை சைபர் க்ரைம் போலீஸாரால்கைது செய்யப்பட்டுள்ள யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 14 நாள் நீதிமன்ற காவல் விதித்து கோவை முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி கோபாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். 

முன்னதாக, கோவை அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை முடித்துவிட்டு, சவுக்கு சங்கர் கோவை நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்து வரப்பட்ட போது, அங்கு கூடியிருந்த திமுக மாவட்ட மகளிர் அணியினர் சவுக்கு சங்கரை கண்டித்து கோஷங்களை எழுப்பி, காவல்துறை வாகனத்தை முற்றுகையிட்டனர். 





கோவை மாநகர சைபர் க்ரைம் உதவி ஆய்வாளர் சுகன்யா அளித்த புகாரின் அடிப்படையில், சவுக்கு சங்கர் மீது ஐபிசி பிரிவுகள் 294-பி (தகாத வார்த்தைகளில் பேசுதல்), 509 (பெண்களை அவதூறாகப் பேசுதல்), 353 (அரசு ஊழியர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி அவர்களை பணி செய்யவிடாமல் தடுத்தல்) மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000 பிரிவு 67 (தகவல் தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்துதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் சவுக்கு சங்கர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த நிலையில், கைது செய்யப்பட்டுள்ள சவுக்கு சங்கர் சங்கரின் காரில் இருந்து அரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்துள்ளதாக தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி போலீசார் கஞ்சா வழக்கும் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 





இந்த நிலையில், நேற்று சவுக்கு சங்கர் கோவை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். அப்போது சவுக்கு சங்கரை மே 17 ம் தேதி வரை நீதிமன்ற காவலில் கோவை மத்திய சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, அவர் நீதிமன்றத்தில் இருந்து கோவை மத்திய சிறைக்கு பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டார்.

அப்போது, நீதிமன்றத்தில் இருந்து சிறைக்கு அழைத்து செல்வதற்காக வெளியே அழைத்து வந்த போது "ஸ்டாலின் குடும்பம் கொள்ளையடிக்க சவுக்கு மீடியா தடையாக இருப்பதால் தான் மேலும் மேலும் பொய் வழக்குகள் போடுகிறார்கள்" என சவுக்கு சங்கர் குற்றம் சாட்டினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...