கோவையில் நீட் தேர்வு மைய குழப்பத்தால் தாமதமாக வந்த மாணவி - தேர்வு எழுத அனுமதி மறுப்பு..!

தமிழக கேரள எல்லை பகுதியான பொள்ளாச்சி அடுத்த மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர் தவறான தேர்வு மையத்திற்கு சென்று விட்டு மீண்டும் சரியான தேர்வு மையத்திற்கு வந்த நிலையில், நேரம் கடந்து விட்டதாக கூறி தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டது.



கோவை: மருத்துவ கல்வி நுழைவுத் தேர்வான நீட் தேர்வு இன்று நாடு முழுவதும் நடைபெற்ற நிலையில், கோவையில் 13 மையங்களில் 371 அரசு பள்ளி மாணவ மாணவிகள் உட்பட 6967 பேர் தேர்வு எழுதினர். 



அணிகலன்கள் அணிய தடை,மின்னணு சாதனங்கள் தடை, ஆடை கட்டுப்பாடுகள், மையத்திற்குள் வரவேண்டிய நேரம் எனத் தேர்வு எழுத வரும் மாணவ மாணவிகள் பின்பற்ற வேண்டிய பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிமுறைகளும் அறிவிக்கப்பட்டிருந்தது.

தேர்விற்கு வந்த அனைத்து மாணவ மாணவிகளும் இரண்டு கட்ட சோதனைக்கு பிறகே தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். இரண்டு மணிக்கு தேர்வு துவங்கும் என்று நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், 1:30 மணிக்குள் அனைவரும் தேர்வு மையத்திற்குள் இருக்க வேண்டும் என்று ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்த சூழலில், கோவை பீளமேடு பகுதியில் நேஷனல் மாடல் மெட்ரிக் உயர்நிலைப்பள்ளி மற்றும் நேஷனல் மாடல் சீனியர் செகண்டரி உயர்நிலைப்பள்ளி ஆகிய இரண்டு பள்ளிகளிலும் தேர்வு மையங்களாக அறிவிக்கப்பட்டிருந்தது. 

நேஷனல் மாடல் கல்வி நிறுவனத்திற்கு உட்பட்ட இந்த இரண்டு பள்ளிகளும் எதிரெதிரே அமைந்துள்ள நிலையில், தேர்வு மையத்திற்கான நுழைவாயில் இரண்டு வீதிகளில் அமைக்கப்பட்டிருந்தது. 

இதனால் தேர்வு எழுத வந்த, மாணவ மாணவிகள் குழப்பம் அடைந்து, மாறி மாறி தேர்வு மையத்திற்கு சென்று அங்கு தங்களது பதிவு எண் உள்ளதா? என்று சரி பார்த்தபடி இருந்தனர். 

இந்த சூழலில், சச்சின் என்ற மாணவன் 1.31 மணிக்கு தேர்வு மையத்திற்கு வந்த போது, அவரது தேர்வு மையமான நேஷனல் மாடல் சீனியர் செகண்டரி பள்ளிக்கு பதிலாகநேஷனல் மாடல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மையத்திற்கு வந்திருந்தார். 

தாமதமாக வந்ததாக கூறி, முதலில் அனுமதி மறுத்த தேர்வு மையத்தினர், அங்கிருந்தவர்களின் வற்புறுத்தல் காரணமாக மாணவனுக்கு அனுமதி வழங்கினர். ஆனால், à®®à®¾à®£à®µà®©à¯à®¤à®©à®¤à¯ பதிவு எண்ணை சரி பார்த்தபோது தான், தேர்வு மையம் மாறி வந்தது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து,அந்த மாணவனை உரிய மையத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்திய போது பதட்டத்தில் அந்த மாணவன் தனது தந்தையுடன் வேகமாக ஓடினான். அப்போது இதை கண்ட அங்கிருந்த நபர் ஒருவர் உடனடியாக தனது இருசக்கர வாகனத்தில் மாணவனை ஏற்றிக் கொண்டு விரைவாக சென்று, சரியான தெரிவு மையமான நேஷனல் மாடல் சீனியர் செகண்டரி பள்ளி மையத்தில் இறக்கி விட்டார். 

பின்னர், அங்கு சிறிது நேர போராட்டத்திற்கு பிறகு பெண் தலைமைக் காவலரான பவானி என்பவரின் பரிந்துரையின் பேரில் 10 நிமிட தாமதத்திற்கு பிறகு வந்த மாணவன் தேர்வு மையத்திற்குள் ஒரு வழியாக à®…னுமதிக்கப்பட்டான்.



இதனிடையே, இதேபோன்ற மற்றும் ஒரு சம்பவத்தில், தமிழக கேரள எல்லை பகுதியான பொள்ளாச்சி அடுத்த மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்த அம்ருத்தா என்ற மாணவி 1.42 மணிக்கு நேஷனல் மாடல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மையத்திற்கு வந்த நிலையில், அவருக்கு தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டது. 



தனது தாமதத்திற்கு காரணம் தேர்வு மைய குளறுபடி என்றும் ஏற்கனவே அந்த மையத்திற்கு சென்று தனது எண்ணை பார்த்த பொழுது தனது பதிவெண் இல்லாததால் இந்த மையத்திற்கு வந்ததாகவும், தன்னை தேர்வு எழுத அனுமதிக்குமாறு மாணவி கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார்.

இருப்பினும், தாமதமாக தேர்வு எழுத வந்ததால் தேர்வு எழுத அனுமதிக்க முடியாது என தேர்வு மைய நிர்வாகிகள் கண்டிப்புடன் கூறவே, அங்கிருந்த மற்ற பெற்றோர்களும் ஊடகவியலாளர்களும் திரண்டு தேர்வு மைய நிர்வாகிகள் மற்றும் காவல்துறையினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

ஒரே ஒரு மாணவி மட்டுமே இருப்பதால், மாணவியை அனுமதிக்க வேண்டும் என்றும் மாணவியின் தாமதத்திற்கு தேர்வு மையத்தின் பெயர் குளறுபடியே காரணம் என்பதால் அதனை ஏற்றுக்கொண்டு அந்த மாணவிக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று தொடர்ந்து வேண்டுகோள் விடுத்தனர். 

ருப்பினும், தாமதமாக தேர்வு எழுத வந்ததால் தேர்வு எழுத அனுமதிக்க முடியாது என தேர்வு மைய நிர்வாகிகள் கண்டிப்புடன் கூறவே, அங்கிருந்த மற்ற பெற்றோர்களும் ஊடகவியலாளர்களும் திரண்டு தேர்வு மைய நிர்வாகிகள் மற்றும் காவல்துறையினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

ஒரே ஒரு மாணவி மட்டுமே இருப்பதால், மாணவியை அனுமதிக்க வேண்டும் என்றும் மாணவியின் தாமதத்திற்கு தேர்வு மையத்தின் பெயர் குளறுபடியே காரணம் என்பதால் அதனை ஏற்றுக்கொண்டு அந்த மாணவிக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று தொடர்ந்து வேண்டுகோள் விடுத்தனர். 

இருப்பினும், தேர்வு மைய நிர்வாகிகள் மாணவியை தேர்வு எழுத அனுமதிக்க இயலாது என உறுதியுடன் கூறிவிட்டனர். இதனால் தேர்வு மைய வாயிலில் கண் கலங்கி நின்ற அந்த மாணவி சோகம் தோய்ந்த முகத்துடன் அங்கிருந்து தனது தந்தையுடன் புறப்பட்டார். 

கேரள மாநில எல்லையில் இருந்து நீண்ட தூரம் பயணம் செய்து வந்ததாலும், போக்குவரத்து நெரிசல் காரணமாக சிறிது தாமதம் ஏற்பட்டதாக கூறிய மாணவியின் தந்தை செந்தில் குமார், இறுதியில் குறித்த நேரத்திற்கு முன்பாக தேர்வு மையத்திற்கு வந்தும் தேர்வு மையத்தின் பெயர் குளறுபடி காரணமாகவே தாமதமானது, என்றார். 

இறுதியில் தனது மகளை தேர்வு எழுத அனுமதிக்காதது மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக கூறி மாணவியின் தந்தை வருத்தத்துடன் புறப்பட்டு சென்றார். 

தமிழகத்தில் நீட் தேர்வே வேண்டாம் என்று மக்கள் கூறிவரும் நிலையில் இந்த நீட் தேர்வை நடத்தும் அரசு தேர்வு எழுத வரும் மாணவ மாணவிகளுக்கு இந்த அளவிற்கு கடுமையான ஒரு சூழலை உருவாக்க கூடாது என்றும் ஒரு சில நிமிடங்கள் தாமதமாக வரும் மாணவ மாணவிகளை தேர்வு எழுத  அனுமதிக்க வேண்டும் என்று அங்கு கூடியிருந்த பெற்றோர்  கோரிக்கை விடுத்தனர். 

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...