கோவை மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் மணிக்கூண்டு இடிக்கப்படும் வீடியோ வைரல்

மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் ரூ.8.63 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டும் பணி தொடங்கியுள்ளதையடுத்து, மணிக்கூண்டு நேற்று இடிக்கப்பட்டது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் ரூ.8.63 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டும் பணி கடந்த மாதம் துவங்கியது. இதனையொட்டி பேருந்து நிலையத்தில் இருந்த பழைய வணிக வளாக கடைகள் ஜேசிபி எந்திரங்கள் மூலம் இடிக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் மேட்டுப்பாளையத்தின் முக்கிய அடையாளமான மணிக்கூண்டு (மே.5) நேற்று இடிக்கப்பட்டது. இந்த நிலையில் ஜேசிபி எந்திரத்தின் மூலம் மணிக்கூண்டு இடிக்கப்படும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...