சமயபுரம் சாலையில் காரை துரத்திய பாகுபலி யானை - நல்வாய்ப்பாக நூலிழையில் உயிர்தப்பிய டிரைவர்

சாலையை கடக்க தயார்நிலையில் நின்றிருந்த காரை, சமயபுரம் வழியாக நெல்லி மலை வனப்பகுதிக்குள் செல்ல முயன்ற பாகுபலி என்ற யானை பிளிறியபடி ஆக்ரோஷமாக துரத்தியதால் பரபரப்பு நிலவியது.


கோவை: மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் இருந்து இன்று (மே.6) அதிகாலை சமயபுரம் வழியாக நெல்லி மலை வனப்பகுதிக்குள் பாகுபலி யானை செல்ல முயன்றது.



அப்போது, சாலையை கடக்கும் பொழுது அங்கே நின்றிருந்த காரை ஆக்ரோஷமாக பிளிறியபடியே துரத்தியது.

நல்வாய்ப்பாக டிரைவர் காரை இயக்கி முன்னோக்கி சென்றதால் உயிர் தப்பினார்.



அதன் பின்னர் சாவகாசமாக சாலையில் கம்பீரமாக நடந்து சென்ற யானையை அப்பகுதி மக்கள் திரளாக நின்று பார்த்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...