நாயக்கன்பாளையம் மற்றும் கோவனூரில் சூறாவளி காற்றில் வாழை மரங்கள் சேதம் - விவசாயிகளுக்கு திமுகவினர் ஆறுதல்

கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொண்டாமுத்தூர் அ.ரவி, கழக நிர்வாகிகளுடன் இன்று சென்று சூறாவளிக்காற்றில் முறிந்து விழுந்த மரங்களை நேரில் பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார்.


கோவை: கோவை வடக்கு மாவட்டம், கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி, பெரியநாயக்கன்பாளையம் கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட, நாயக்கன்பாளையம் ஊராட்சி, கோவனூரில் நேற்றைய தினம் வீசிய பலத்த சூறாவளி காற்றில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட, வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதமடைந்தன.



இதனை கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொண்டாமுத்தூர் அ.ரவி, கழக நிர்வாகிகளுடன் இன்று (மே.6) நேரில் சென்று பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறி, துறை சார்ந்த அதிகாரிகளிடம் முறையிட்டு உரிய இழப்பீடு பெற்றுத் தருவதாக உறுதியளித்தார்.



இந்நிகழ்வில் நாடாளுமன்ற கழக வேட்பாளர் கணபதி ப.ராஜ்குமார், தலைமைச் செயற்குழு உறுப்பினர் டி.பி.சுப்பிரமணியன், மாவட்ட துணை செயலாளர் அசோக்பாபு ஆறுக்குட்டி, ஒன்றிய கழகச் செயலாளர் எஸ்.கார்த்திக், கோவனூர் ரவி, சந்துருஜெகவி, திருமூர்த்தி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் இருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...