கோவை உள்பட 15 மாவட்டங்களுக்கு இன்று ஆரெஞ்சு அலர்ட் – சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

கோவை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தருமபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் ஆகிய 15 மாவட்டங்களுக்கு இன்று வெப்ப அலைக்கான ஆரெஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.


கோவை: தமிழகத்தில் கடும் வெப்பம் ஏற்கனவே நிலவி வரும் நிலையில், கோவை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தருமபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் ஆகிய 15 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (மே.6) வெப்ப அலைக்கான ஆரெஞ்சு அலர்ட் விடுத்துள்ளது.

இதைத்தொடர்ந்து நாளை (07.05.24) கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.

இதேபோல நாளை மறுநாள் (08.05.24) கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, நெல்லை மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் வானிலை ஆய்வு நடுவம் அறிவித்துள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...