உடுமலை அருகே கொழுமம் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா – ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

கோட்டை மாரியம்மன் கோவிலில் கம்பத்துக்கு தீர்த்த ஊற்றும் நிகழ்வும், கோட்டை மாரியம்மனுக்கு குங்கும அர்ச்சனையும் இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


திருப்பூர்: சித்திரை மாதம் என்றாலே திருவிழாக்களின் மாதம் என்று சொல்லுமளவுக்கு பல கோவில்களில் திருவிழாக்கள் நடைபெறும். கோடை வெயில் கொளுத்தும் காலத்தில் தெய்வங்களை மட்டுமல்லாமல் மண்ணையும், மனிதர்களையும் குளிர்விக்கும் சக்தி திருவிழாக்களுக்கு உண்டு. அந்தவகையில் உடுமலை அருகே பிரசித்தி பெற்ற கொழுமம் கோட்டை மாரியம்மன் கோவில் சித்திரைத் திருவிழா தொடங்கியுள்ளது.



முதல் நிகழ்வாக கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி நோன்பு கட்டப்பட்டு அன்றைய தினமே அமராவதி ஆற்றில் திருக்கம்பத்துக்கு அபிஷேகம், அலங்கார பூஜைகள் செய்யப்பட்டு இரவு 11 மணியளவில் திருக்கம்பம் நடும் விழா நடைபெற்றது. இந்த நிலையில் இன்று கோட்டை மாரியம்மன் கோவிலில் கம்பத்துக்கு தீர்த்த ஊற்றும் நிகழ்வும், கோட்டை மாரியம்மனுக்கு குங்கும அர்ச்சனையும் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் அர்ச்சகர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் நாளை மே 7-ம் தேதி ஊர் பூவோடு எடுக்கும் நிகழ்வும், வரும் மே 8 ம் தேதி இரவு 9 மணியளவில் மாரியம்மன் திருத்தேரில் எழுந்தருளி வீதி வீதியாக பயணம் செய்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார். சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த அனைத்து சமூகத்தினரும் ஒருங்கிணைந்து சித்திரைத் திருவிழா கொண்டாடி வரும் நிலையில் ஏராளமான பக்தர்கள் இன்று கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர். மேலும் கோவில் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு மற்றும் இந்து சமய அறநிலைத்துறை நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...