கரும்புகடை ஆத்துப்பாலம் அருகே தீ விபத்து - தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் தீவிரம்

ஆற்றில் கொட்டி வைக்கப்பட்ட குப்பைகள், சருகுகள் ஆகியவற்றில் திடீரென இன்று தீப்பிடித்து எரியத்தொடங்கியது. பின்னர் அருகில் இருந்த மரம், செடிகளிலும் தீ வேகமாக பரவி வருவதால் அப்பகுதி புகைமண்டலம் போல் காட்சியளிக்கிறது.


கோவை: கோவை கரும்புகடை ஆத்துபாலம் அருகே ஆற்றில் கொட்டி வைக்கப்பட்ட குப்பைகள், சருகுகள் ஆகியவற்றால் திடீரென இன்று (மே.6) தீ விபத்து ஏற்பட்டது. பின் அருகில் இருந்த மரம் செடிகளில் திடீரென தீ பரவி வேகமாக தீப்பிடித்து எரிந்து வருகிறது.



இதனால் அப்பகுதி முழுவதும் புகைமூட்டமாய் காணப்பட்டது. ஆற்றில் கொட்டி வைக்கப்பட்ட பிளாஸ்டிக் மற்றும் மரம் செடிகளில் தீ பரவியதால் அப்பகுதி புகை மண்டலம் போல் காட்சியளிக்கிறது.

பின்னர் அப்பகுதி மக்கள் இதுகுறித்து அளித்த தகவலின் பேரில் அங்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...