தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பிரிவு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா

உயர் பதவியில் உள்ள முன்னாள் மாணவர்கள் மற்றும் வெளிநாட்டில் உள்ள முன்னாள் மாணவர்கள் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு கல்வியினை பயில்வதற்கு உதவும் வகையில் கல்வித்தொகை வழங்க முன்வரவேண்டும் என தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் கீதாலட்சுமி கூறியுள்ளார்.


கோவை: கோவை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழத்தில் இளம் அறிவியல் வேளாண்மை மற்றும் இளம் அறிவியல் தோட்டக்கலை (தமிழ் வழிக் கல்வி) பாட பிரிவில் பயிலும் மாணவர்களுக்கு "வேளாண்மை தோட்டக்கலை 1977-81 கோயம்புத்தூர் முன்னாள் மாணவர்கள், எண்டோவ்மென்ட்” - கல்வி உதவித்தொகை வழங்கும் விழா தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்திலுள்ள துணைவேந்தர் அறையில் நடைபெற்றது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழத்தின் துணைவேந்தர் முனைவர் V. கீதாலட்சுமி, முனைவர் N.வெங்கடேச பழனிச்சாமி முதன்மையர் (வேளாண்மை), முனைவர் T.N.பாலமோகன் முதன்மையர் (தோட்டக்கலை) (ஓய்வு), P.T. கலைசெல்வன், துணை பொது மேலாளர், கனரா வங்கி (ஓய்வு), V. நடேசன், முதன்மை மேலாளர், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஓய்வு), V. இரங்கநாதன், முதன்மை மேலாளர், கனரா வங்கி (ஓய்வு) மற்றும் M. G. முகமது இக்பால், கூடுதல் வேளாண் இயக்குனர், தமிழ்நாடு அரசு (ஓய்வு) ஆகியோர் விழாவில் கலந்துகொண்டனர்.

முதன்மையர் (வேளாண்மை), முனைவர் N. வெங்கடேச பழனிச்சாமி, தனது வாழ்த்துரையில் கடந்த ஆண்டு ரூ.6,40,000/- வேளாண்மை - தோட்டக்கலை 1977-81 கோயம்புத்தூர் முன்னாள் மாணவர்கள், முன்னாள் மாணவர்களால் வழங்கப்பட்டது எனவும், இத்தொகையில் ரூ.40,000/- கடந்த ஆண்டு (2022-2023) இளம் அறிவியல் மற்றும் தோட்டக்கலை பயிலும் மாணவிகளுக்கு தலா ரூ.20,000/- வழங்கப்பட்டது எனவும் கூறினார். மேலும் மீதமுள்ள ரூ.6,00,000/- தொகையை நிலையான வைப்பு (Fixed Deposit) வைக்கப்பட்டு இதன்மூலம் பெறப்பட்ட வட்டித்தொகையான ரூ.43,500/- யை இந்த ஆண்டு (2023-2024) இளம் அறிவியியல் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பயிலும் மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது.

முன்னாள் முதன்மையர் (தோட்டக்கலை) முனைவர் T.N.பாலமோகன் (ஓய்வு), தனது உரையில், 1977-81 ஆம் ஆண்டில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பயின்ற சக மாணவர்கள் குழுவாக இணைந்து, கல்வி கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணம் செலுத்த முடியாத மாணவர்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்வதாகவும் மேலும் இதுபோன்ற உதவிகளை மற்றவர்கள் செய்யவேண்டும் என்பதற்காகவும் இம்மாதிரி கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறினார்.

மேலும் இந்த கல்வித்தொகை விருதை பெறும் இளம் அறிவியல் மற்றும் தோட்டக்கலை மாணவிகள் இருவர் தங்களின் நன்றியினை தெரிவித்தனர்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் V. கீதாலட்சுமிதமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக இயங்கி வரும் கல்வி உதவித் தொகை ஒருங்கிணைப்பு மையமானது பொருளாதார ரீதியாக பின்தங்கிய, ஒற்றை பெற்றோர் உள்ள மாணவ, மாணவிகளுக்கும் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கும் பல்வேறு தொண்டு நிறுவனங்களின் மூலம் கல்வி உதவித்தொகை ஏற்பாடு செய்து வருவதாகவும், தற்போது வேளாண்மை தோட்டக்கலை 1977-81 கோயம்புத்தூர் முன்னாள் மாணவர்கள், வழங்கும் கல்வி உதவித்தொகை மாணவர்களின் கல்விக்கு உதவும் வகையில் இருப்பதாக அவர் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில் உயர் பதவியில் உள்ள முன்னாள் மாணவர்கள் மற்றும் வெளிநாட்டில் உள்ள முன்னாள் மாணவர்கள் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு அவர்களது கல்வியினை பயில்வதற்கு உதவும் வகையில் இதுபோன்ற கல்வித்தொகை வழங்க முன்வரவேண்டும் எனவும் கூறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...