உடுமலை அருகே சின்னக்கரட்டில் கோவில் விழாவில் வழிபாடு செய்வதில் இரு தரப்பினரிடையே பிரச்சனை - ஒருதரப்பினர் சாலை மறியல்

உடுமலை தாசில்தார் சுந்தரம், துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெ.சுகுமாறன் உள்ளிட்ட அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் அனைத்து சமுதாயத்தினரும் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வது என முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து மறியலை கைவிட்டு மக்கள் கலைந்து சென்றனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த ஜல்லிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சின்னக்கரடு அருகே வீர ஜக்கம்மாள் தேவி கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்திரை திருவிழா வருகின்ற 9 மற்றும் 10-ம் தேதி இரண்டு நாட்களுக்கு நடைபெறுகிறது. ஊர் மக்கள் ஒன்று கூடி விழா எடுக்கும் இந்த கோவிலில் ஒரு சமுதாயத்தில் இரண்டாக பிரிந்த பிரிவினர் விழா சம்பந்தமாக சில கோரிக்கைகளை வலியுறுத்தி வந்தனர். இதனால் விழா கொண்டாடுவதில் சிக்கல்கள் ஏற்பட்டது.

அதைத் தொடர்ந்து இன்று காலை உடுமலை தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் ப.சுந்தரம் தலைமையில் இன்று இரு தரப்பினரிடமும் தனித்தனியாகவும் ஒன்றாகவும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் மாலை வரையிலும் பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் ஆவேசமடைந்த ஒரு பிரிவினர் குழந்தைகளுடன் திடீரென நூலகம் அருகே உடுமலை- திருமூர்த்திமலை சாலையில் அமர்ந்து ஈடுபட்டனர்.



அதைத்தொடர்ந்து அங்கு வருகை தந்த உடுமலை தாசில்தார் சுந்தரம், துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெ.சுகுமாறன் உள்ளிட்ட அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தையில் நடத்தினர். அதில் அனைத்து சமுதாயத்தினரும் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம்செய்வது என முடிவு செய்யப்பட்டது. அத்துடன் இதுகுறித்து இன்று உடுமலை ஆர்.டி.ஓ ஜஸ்வந்த்கண்ணன் தலைமையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவது என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர். ஊர் சமுதாயத்தினர் ஏராளமானோர் திரண்ட இந்த நிகழ்வால் இன்று காலை முதல் மாலை வரையிலும் உடுமலை தாலுகா அலுவலகம் பகுதியில் பரபரப்பு நிலவி வந்தது. அதைத் தொடர்ந்து போலீஸ்பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...