உடுமலையில் நடைபெற்ற சாலை விபத்தில் நகராட்சி ஊழியர் உயிரிழப்பு

நகராட்சி அலுவலகத்திற்கு திரும்புவதற்காக மேம்பாலத்தில் இருந்து இறங்கிய போது எதிராக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் தூக்கி வீசப்பட்டு நகராட்சி ஊழியர் சந்திரசேகரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சியில் மின்கம்பி பணியாளராக பணிபுரிந்து வருபவர் சந்திரசேகரன்(வயது 57). இவர் இன்று பணி நிமித்தமாக நகரப் பகுதிக்குள் சென்று விட்டு உடுமலை மேம்பாலத்தின் வழியாக நகராட்சி அலுவலகத்திற்கு வந்து கொண்டு இருந்தார்.

அவர் நகராட்சி அலுவலகத்திற்கு திரும்புவதற்காக மேம்பாலத்தில் இருந்து இறங்கிய போது எதிராக வந்த மோட்டார் சைக்கிள் சந்திரசேகர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் சந்திரசேகரன் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். அதைத்தொடர்ந்து அங்கு வருகை தந்த உடுமலை போலீசார் சந்திரசேகரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த நபர் பலத்த காயங்களுடன் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். இந்த விபத்து குறித்து உடுமலை போலீசார் விசாரித்து வருகின்றனர். இது குறித்து சமூக அலுவலர்கள் கூறுகையில்,வாகன போக்குவரத்து நெருக்கம் மிகுந்த இந்த மேம்பாலத்தின் இரண்டு பகுதிகளிலும் காந்தி சதுக்கம் பகுதிக்கு செல்வதற்காக இணைப்பு சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் ஆபத்தான முறையில் மேம்பாலத்தின் இரண்டு பகுதிகளையும் கடந்து வருகின்றனர்.

அப்போது மேம்பாலத்தில் இருந்து இறங்கும் வாகனங்களும் மேம்பாலத்தில் ஏறுவதற்காக வருகின்ற வாகனங்களும் நிலை தடுமாறி விபத்தில் சிக்குவது தொடர்கதையாக உள்ளது. இதனால் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. அதை உணர்த்தும் விதமாக நேற்று இரவு வயதான தம்பதியினர் வந்த மோட்டார் சைக்கிள் மீது மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டது. அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் துரிதகதியில் செயல்பட்டதால் உயிரிழப்பு தடுக்கப்பட்டது.

ஆனால் இன்று உயிரிழப்பு நிகழ்ந்து விட்டது.இதற்கு அதிகாரிகளின் அலட்சியமே காரணமாகும். இனியும் ஒரு உயிரிழப்பு நேருவதற்கு முன்பு மேம்பாலத்தின் இரண்டு பகுதிகளிலும் டிவைடர் வைத்து வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பான பயணத்தை ஏற்படுத்தி தர வேண்டும் என்று தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...