கோவையில் காவலர்களின் குழந்தைகளுக்கான WET CLAY பயிற்சி வகுப்பு துவங்கியது

கோவை மாநகர் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமையில், காவலர்களின் குழந்தைகளுக்கான WET CLAY பயிற்சி வகுப்புகள் கோவை மாநகர் காவல் அலுவலக கலந்தாய்வு கூடத்தில் இன்று துவங்கின. 6 நாட்களில் சுத்தம், தன்னம்பிக்கை போன்றவை கற்பிக்கப்படும்.


கோவை: கோவையில் மாநகர் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமையில் காவலர்களின் குழந்தைகளுக்கான 6 DAYS WET CLAY பயிற்சி வகுப்பு துவங்கியது.



இத்திட்டம் மே 8, 11, 13, 15, மற்றும் 17 ஆகிய நாட்களில் நடைபெறும். இந்த பயிற்சியில் காவலர் குடும்பத்தை சார்ந்த குழந்தைகள் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையில் பயிலும் 102 மாணவ/மாணவிகள் கலந்து கொண்டனர்.



இந்த பயிற்சி வகுப்பில் SPIEGEL TRAINING AND FOUNDATION நிறுவனர் சத்தியமூர்த்தி சீரிய பயிற்சிகளை நடத்துகிறார். இப்பயிற்சிகளில் சுத்தம், தன்னம்பிக்கை, சுய மதிப்பு, சுய ஒழுக்கம், உணவு வழக்க வழக்கங்கள், மற்றும் தனித்திறமையை கண்டறிதல் ஆகியவை பயிற்சியாக வழங்கப்படுகின்றன.

இதுபற்றி பேசிய பாலகிருஷ்ணன் மாணவ/மாணவிகளை தங்களது ஓய்வு நேரத்தில் பயனுள்ள வகையில் செலவிட வேண்டும் என்றும், தங்களது முடிவுகள் தங்களது எதிர்காலத்தை தீர்மானிக்கும் என்று கூறினார்.

நிகழ்ச்சியில் கோவை மாநகர் ஆயுதப்படை காவல் உதவி ஆணையர் சேகரும் பங்கேற்றார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...