நரசிம்மநாயக்கன்பாளையத்தில் பெண்ணை கொலை செய்து தங்க நகையை பறித்துச் சென்ற குற்றவாளி 24 மணி நேரத்தில் கைது

அடமானம் வைத்த காரை மீட்பதற்காக பக்கத்து வீட்டில் புகுந்து நகையை திருட சென்றபோது, ரேணுகா என்ற பெண் சத்தம் போட்டதால் அவரை வெட்டி கொலை செய்துவிட்டு மூன்றரை சவரன் நகையை பறித்து சென்றதாக போலீசாரிடம் குற்றவாளி தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் நேற்று பட்டப் பகலில் வீட்டில் தனியாக இருந்த ரேணுகா என்பவரை மர்ம நபர் தலையில் கத்தியால் வெட்டி படுகொலை செய்து அவர் கழுத்தில் இருந்த 3 1/2 சவரன் தங்கச் சங்கங்களை பறித்துச் சென்று இருந்தார். இது தொடர்பாக பெரியநாயக்கன்பாளையம் போலீசார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தவரின் பேரில் ஏழு தனிப்படை அமைத்து குற்றவாளியை தேடி வந்தனர்.

இந்த நிலையில் எதிர் வீட்டில் இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டதில் ஒரு நபர் வீட்டின் காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து வீட்டில் நுழைந்து ஏழு நிமிடத்தில் வெளியேறுவது தெரியவந்தது. இதனையடுத்து அக்கம்பக்கம் விசாரிக்கையில் பக்கத்து வீட்டில் இருந்த சதீஸ் என்பவர் நகைக்காக இந்த கொலையை செய்தது தெரியவந்தது.

தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் அருகில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருவதும், கடன் சுமை அதிகமாக இருந்ததாகவும், தனது காரை அடமானம் வைத்திருந்து அதற்கு பணம் செலுத்த முடியாமல் இருந்ததால் பக்கத்து வீட்டில் புகுந்த நகையை திருட சென்றதாகவும் இவரை பார்த்து ரேணுகா சத்தம் போட்டதால் அவர் மறைத்து எடுத்துச் சென்ற கத்தியை வைத்து தலையில் வெட்டி கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

மேலும் திருடிச் சென்ற 3 1/2 சவரன் தங்க சங்கிலியை போலீசார் பறிமுதல் செய்தனர். குற்றவாளி நேற்று கொலை செய்துவிட்டு வீட்டிற்கு சென்று குளித்து சேவிங் செய்து மீண்டும் போலீசார் வந்து உடலை கைப்பற்றும் போது கூட்டத்தோடு கூட்டமாக அங்கேயே நின்றுள்ளார்.



இந்த நிலையில் சம்பவ இடத்தை பார்வையிட்ட ஐஜி பவானிஸ்வரி செய்தியாளர்களிடம் பேசும்போது, சிசிடிவி காட்சிகள் உதவியுடன் குற்றவாளியை 24 மணி நேரத்தில் கைது செய்ததாகவும், விரைந்து செயல்பட்டு குற்றவாளியை கண்டுபிடித்த தனிப்படையினருக்கு தனது பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டார்.

அனைத்து வீடுகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார். சிசிடிவி கேமரா இருந்தால் எந்த குற்றவாளியும் உள்ளே நுழைய அச்சப்படுவார். எனவே அனைத்து வீடுகளிலும் தவறாமல் சிசிடிவி பொருத்த வேண்டுமென கேட்டுக்கொண்டார். தொடர்ந்து அவர் செல்லும் போது அவரிடம் அவரது உறவினர்கள் குழந்தைகள் நிலை எடுத்துக் கூறினர். படுகொலை செய்யப்பட்ட ரேணுகாவின் இரண்டாவது மகள் பிளஸ் டூ தேர்வில் 533 மதிப்பெண் பெற்றுள்ளதால் அவரது மேல் படிப்பிற்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...