இணைய சேவை குறைபாட்டால் தாராபுரம் தலைமை தபால் நிலைய சேவை பாதிப்பு

இணைய சேவை குறைபாடு காரணமாக நேற்றிலிருந்து தலைமை தபால் நிலையத்திலிருந்து எந்த ஒரு பதிவு தபால்களும், இதர சேவைகளும் நடைபெறாமல் உள்ளது. இணைய சேவையில் குறைபாடு உள்ளதாக தலைமை தபால் நிலையத்தில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: தாராபுரம் தலைமை தபால் நிலையத்திலிருந்து தினசரி ஏராளமான பதிவு தபால்கள் வெளியூர்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இணைய சேவை குறைபாடு காரணமாக நேற்றிலிருந்து தலைமை தபால் நிலையத்திலிருந்து எந்த ஒரு பதிவு தபால்களும், இதர சேவைகளும் நடைபெறாமல் உள்ளது.

இதற்கு இணைய சேவையில் குறைபாடு உள்ளதாக தலைமை தபால் நிலையத்தில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. தாராபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் அடிக்கடி இணைய சேவை குறைபாடுகள் ஏற்பட்டு வருகிறது. பெரும்பாலும் அரசு நிறுவனங்களில் உயிரோடு பாரத் சென்சார் நிகாம் லிமிடெட் கட்டுப்பாட்டில் இணைய சேவைகள் தாராபுரம் பிஎஸ்என்எல் அலுவலகம் மூலமாக வழங்கப்பட்டுள்ளது.

இணையத்தில் அடிக்கடி குறைபாடுகள் ஏற்படுவதால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்பிற்குள்ளாகி வருகிறார்கள். இதனால் டிஜிட்டல் இந்தியா சேவை முழுமையாக முடங்கி விட்டது. அரசு நிறுவனம் மோசமான இணைய சேவையை சந்திப்பதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். விரைவில் பிஎஸ்என்எல் நிர்வாகம் இணைய சேவையை சீர் செய்யுமா என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...