மழை வர வேண்டி கோவை கோனியம்மன் கோவிலில் முட்டி போட்டு இந்து முன்னணி கட்சியினர் வழிபாடு

இந்து முன்னணி மாநில நிர்வாக குழு உறுப்பினர் சதீஷ் தலைமையில் கோவை டவுன் ஹால் பகுதியில் உள்ள கோனியம்மன் கோவிலில் மழை வேண்டி இந்து முன்னணி கட்சியினர் முட்டி போட்டு வழிபாடு நடத்தினர்.


கோவை: கோவையில் கடும் வெப்பம் காரணமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதேபோல சிறுவாணி அணை, பில்லூர் அணை, ஆழியார் அணை உள்ளிட்ட பல்வேறு அணைகளில் நீர்மட்டம் மிகவும் குறைந்துள்ளது. இதனால் குடிநீருக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு இந்து முன்னணி மாநில நிர்வாக குழு உறுப்பினர் சதிஷ் தலைமையில் கோவை டவுன் ஹால் பகுதியில் உள்ள கோனியம்மன் கோவிலில் நூற்றுக்கும் மேற்பட்ட இந்து முன்னணி கட்சியினர் முட்டி போட்டு வழிபாடு செய்தனர்.



மேலும் சதீஷ் கூறும்போது மழை இல்லாமல் விவசாயிகள், பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகையால் இந்து முன்னணி சார்பில் நூற்றுக்கும் மேற்பட்டோர் முட்டி போட்டு வழிபாடு செய்து மழை பெற வேண்டினோம் என தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...