தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக உயிரி தொழில்நுட்ப மகத்துவ மையம் மற்றும் தொடக்க நிறுவனங்களுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

உயிரி தொழில்நுட்ப மகத்துவ மையம் மற்றும் வேளாண் தொடக்க நிறுவனங்களுக்கு இடையே ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் துணைவேந்தர் முனைவர் வெ.கீதாலட்சுமி கையெழுத்திட்டார்.


கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக உயிரி தொழில்நுட்ப மகத்துவ மையம் 106 லட்சம் சதுர அடி பரப்பளவில் நிறுவப்பட்டுள்ளது. இம்மையத்தின் மூலம் பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி, மேம்பாட்டு நிறுவனங்கள் மற்றும் தொடக்க நிறுவனங்களுக்கு இடையே புதுமையான கண்டுபிடிப்புகள் மற்றும் அறிவுசார் தொழில்நுட்பங்களை பரிமாற்றம் செய்வதற்கு வழி வகுக்கும்.

பொது/தனியார் கூட்டு முயற்சியின் மூலம் உயிரி தொழில்நுட்பவியல், உயிர் தகவலியல், மரபியல், மூலக்கூறு கண்டறிதல், மரபணு தனிமைப்படுத்தல், உயிரணு வளர்ப்பு மற்றும் வேளாண் இடுபொருட்கள் ஆகியவற்றை மேம்படுத்த உதவும். இதன் தொடக்கமாக, உயிரி தொழில்நுட்ப மகத்துவ மையம் மற்றும் வேளாண் தொடக்க நிறுவனங்களுக்கு இடையே ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் 06.05.2024 அன்று நடைபெற்றது.



உயிரி தொழில்நுட்ப மகத்துவ மையம் சார்பாக தாவர மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்ப மைய இயக்குனர் முனைவர் ந.செந்தில் தொடக்க நிறுவனங்களான ஒன்னோமிக்ஸ் பிரைவேட் லிமிடெட், புஸ்மர் அக்ரோ ஃபுட்ஸ் இண்டஸ்ட்ரீஸ், மகா சக்தி நேச்சுரல், யுனிவர்ஸ் ஃபுட் புராடக்ட்ஸ் மற்றும் ஜினி நாராயணன்இடையே தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் வெ.கீதாலட்சுமி மற்றும் பதிவாளர் முனைவர் இரா.தமிழ்வேந்தன் ஆகியோர்கள் முன்னிலையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.



இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வேளாண் வணிக மேம்பாட்டு இயக்குநர் முனைவர் ஈ.சோமசுந்தரம், தாவர இனப்பெருக்கம் மற்றும் மரபியல் மைய இயக்குநர் முனைவர் ஆர்.ரவிகேசவன், தாவர உயிரி தொழில்நுட்பத்துறை தலைவர் முனைவர் ஈ.கோகிலாதேவி, திட்ட இயக்குனர் மற்றும் பேராசிரியர் முனைவர் ச.மோகன்குமார், உயிரி தொழில்நுட்ப மகத்துவ மைய தலைமை நிர்வாக அதிகாரி ரா.ராம்குமார் மற்றும் தொடக்க நிறுவனங்களின் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...