கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற கோர விபத்தில் 9 பேர் காயம் - வீடியோ வைரல்

கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, பேருந்து நிலையத்திற்குள் வைக்கப்பட்டிருந்த மையதடுப்புகளை உடைத்துக் கொண்டு பேருந்துக்காக காத்திருந்த பயணிகள் மீது அதிவேகமாக மோதி, பின்னர் அங்கு நின்று கொண்டிருந்த அரசு பேருந்தை இடித்துக்கொண்டு நின்றது.


கோவை: கோவை காந்திபுரம் நகரப் பேருந்து நிலையத்தில் இருந்து கணுவாய் வரை சப்தகிரி என்ற தனியார் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று (மே.6) அதிகாலை வழக்கம் போல் காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து புறப்படுவதற்காக சப்தகிரி பேருந்து வந்துள்ளது. அப்போது காந்திபுரம் பேருந்து நிலையத்திற்குள் வந்ததும் வரிசையில் பேருந்துகள் நிற்பதை பார்த்த ஓட்டுநர் பேருந்தை பிரேக் பிடித்து நிறுத்த முயன்றுள்ளார்.



அப்போது பிரேக் செயலிழந்த நிலையில் அதிர்ச்சிக்குள்ளான ஓட்டுநர் செய்வதறியாது பேருந்துகளின் மீது மோதாமல் இருக்க வாகனத்தை இடது புறம் திருப்பினார். கட்டுப்பாட்டை இழந்து சென்று கொண்டிருந்த பேருந்து, பேருந்து நிலையத்திற்குள் வைக்கப்பட்டிருந்த மையதடுப்புகளை உடைத்துக் கொண்டு பேருந்துக்காக காத்திருந்த பயணிகள் மீது அதிவேகமாக மோதி பஸ் முன்னால் நின்று கொண்டிருந்த கிணத்துக்கடவு செல்லும் அரசு பஸ்சின் பின்பகுதி மற்றும் அங்கு இருந்த இரும்பு தடுப்புகளில் மோதி நின்றது.

இந்த சம்பவத்தில் பஸ் நிலையத்தில் பொறிக்கடை நடத்தி வந்த வியாபாரி முருகேசன் (50) உள்பட 9 பயணிகளுக்கு காயம் ஏற்பட்டது. பின் காயம் அடைந்தவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.பின்னர் இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள கோவை கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், விபத்தில் சிக்கிய பஸ்சை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். பின் இது தொடர்பாக பஸ் டிரைவர் சஞ்சீவ் (20) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இதற்கிடையே இந்த விபத்து வீடியோ காட்சிகள் தற்போது (மே.7) சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...