கோவையைச் சேர்ந்த 7 வயது சிறுவன் சிலம்பம் சுற்றியபடி 15 கிலோமீட்டர் ஓடி உலக சாதனை

ஒற்றை சிலம்பத்தை 15 கிலோ மீட்டர் தூரத்திற்கு தொடர்ந்து ஓடியபடி ஒரு மணி நேரம் முப்பத்தாறு நிமிடங்களில், 11,520 தடவை சிலம்பம் சுற்றி மித்ரன் என்ற சிறுவன் உலக சாதனை படைத்துள்ளார். மித்ரனுக்கு உலக சாதனை புத்தகங்களின் கோவை மாவட்ட தலைவர் பிரகாஷ்ராஜ் கோப்பை, பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தார்.


கோவை: கோவை, குரும்பபாளையம் பகுதியை சேர்ந்த தமிழ்செல்வன், பிரியா ஆகியோரின் மகன் மித்ரன். ஏழு வயதான சிறுவன் மித்ரன் தமிழக பாரம்பரிய கலைகளான சிலம்பம், அடிமுறை, வேல்கம்பு, வாள்வீச்சு போன்ற தமிழ் பாரம்பரிய கலைகளை சிறு வயது முதலே ஆர்வமாக கற்று வருகிறார்.



இந்நிலையில், சிறுவனின் ஆர்வத்தை கண்ட அவரது பயிற்சியாளர் பிரகாஷ் ராஜ் சிலம்பம் சுற்றுவதில் பிரத்யேக பயிற்சி வழங்கியுள்ளார். அதன்படி இன்று (மே.7) ஒற்றை சிலம்பத்தை 15 கிலோ மீட்டர் தொடர்ந்து ஓடிய படி ஒரு மணி நேரம் முப்பத்தாறு நிமிடங்களில், 11,520 தடவை சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்துள்ளார்.



குரும்பபாளையம் ஆதித்யா குளோபல் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த சாதனை, இந்தியா உலக சாதனை புத்தகம், யூரோப்பியன் உலக சாதனை புத்தகம் மற்றும் அமெரிக்கன் உலக சாதனை புத்தகங்களில் இடம் பிடித்தது.பின்னர் சாதனை மாணவன் மித்ரனுக்கு உலக சாதனை புத்தகங்களின் கோவை மாவட்ட தலைவர் பிரகாஷ்ராஜ் கோப்பை, பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...