மழை வேண்டி வடமதுரை விருந்தீஸ்வரர் கோவிலில் வடக்கு மாவட்ட இந்து முன்னணி சார்பில் சிறப்பு பூஜை

இந்து முன்னணி நிர்வாகிகள் கூட்டாக அமர்ந்து சிவநாமம் மற்றும் மந்திரங்கள் ஓதி கூட்டு பிராத்தனை செய்தனர். பின்னர், வெற்றிலை, பாக்கு, எலுமிச்சை, தேங்காய், பழங்கள் மற்றும் பூமாலை உள்ளிட்டவற்றை கொடுத்து மழை வேண்டி விருந்தீஸ்வரருக்கு சிறப்பு பூஜை செய்தனர்.


கோவை: கோவையில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகவே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதற்காக கோவை துடியலூர் அடுத்துள்ள வடமதுரை அருள்மிகு விருந்தீஸ்வர சுவாமி திருக்கோயிலில் கோவை வடக்கு மாவட்ட இந்து முன்னணி சார்பாக மழை வேண்டி சிறப்பு பூஜை மற்றும் கூட்டு பிராத்தனை நடைபெற்றது.



இந்த நிகழ்ச்சிக்கு கோட்ட செயலாளர் உருவை பாலன் தலைமை தாங்கினார். இந்த பூஜையில் கலந்துக்கொண்டவர்கள் கூட்டாக அமர்ந்துசிவநாமம் மற்றும் மந்திரங்கள் ஓதி கூட்டு பிராத்தனை செய்தனர். தொடர்ந்து வெற்றிலை, பாக்கு, எலுமிச்சை, தேங்காய், பழங்கள் மற்றும் பூமாலை உள்ளிட்டவைகளை கொடுத்து விருந்தீஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர்.

இந்த சிறப்பு பூஜையில் மாவட்ட செய்தி தொடர்பாளர் ஜெய் கார்த்திக், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தம்பி சரவணன், மாவட்ட பொறுப்பாளர்கள் படையப்பா, செல்வம், அசோக், முருகானந்தம், முருகன் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...