வெள்ளக்கிணறு மற்றும் உருமாண்டம்பாளையத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க ஆலோசனை கூட்டம்

வெள்ளக்கிணறு மற்றும் உருமாண்டம்பாளையத்தில் குட்டைகளில் சேரும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க சிறுதுளி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.


கோவை: வெள்ளக்கிணறு மற்றும் உருமாண்டம்பாளையத்தில் உள்ள குட்டைகளில் சேரும் கழிவுநீரினை சுத்திகரிப்பதற்காக, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு ஆலோசனை கூட்டம் மே 6ஆம் தேதி சிறுதுளி தலைமையில் நடந்தது. ஆர்.எஸ். கிருஷ்ணஸ்வாமி, உயர்மட்ட குழு சார்பில், நிலையத்தை பற்றியும் அதன் நோக்கத்தையும் விரிவான விளக்கம் அளித்தார். நித்திலேஷ், Apta Solvics மூலமாக வடிவமைப்பு மற்றும் நிலையத்தின் செயல்பாடுகள் பற்றி விரிவான கண்ணோட்டத்தை வழங்கினார்.

மாநகராட்சி அதிகாரிகள், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், வெள்ளக்கிணறு கவுன்சிலர், விஸ்வநாதன் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட், அண்ணாமலை ஸ்டோர்ஸ், கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வெள்ளக்கிணறு & உருமாண்டம்பாளையம் குடியிருப்பாளர்கள், எல்ஜி எக்யூப்மெண்ட்ஸ் எல்டிடி, மார்ட்டின் குரூப் ஆஃப் கம்பெனிஸ், காட்டன் சிட்டி டெவலப்பர்ஸ், அபெக்ஸ் உறுப்பினர்கள் மற்றும் சிறுதுளி ஊழியர்கள் பங்கேற்றனர். நிலையத்தின் அமைப்பு மற்றும் பராமரிப்பு ரீதியாக செய்யும் படி விவாதங்கள் நடைபெற்றது மற்றும் நிலையை பராமரிப்பதற்கு அவர்களின் பங்களிப்பு பற்றி பேசப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...