தாராபுரத்தில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

வாரத்திற்கு 4 குடம் தண்ணீர் மட்டுமே வழங்கப்படுவதாகவும், இதனால் காலை நேரங்களில் பணிக்கு செல்வோர், கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மிகவும் சிரமம் அடைவதாக பெண்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட குளத்து புஞ்சை தெரு 13,வது வார்டு பகுதியில் சுமார் 2000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு ஆழ்துளை கிணறுகள் மற்றும் காவேரி கூட்டு குடிநீர் திட்ட குடிநீர் சரிவர வழங்கவில்லை. இதனால் குடிநீர் கிடைக்காமல் மக்கள் தவித்து வந்தனர்.

மேலும் ஒரு வாரத்திற்கு 4, குடம் தண்ணீர் மட்டுமே வழங்கப்படுவதாக அப்பகுதி பெண்கள் தெரிவித்தனர். இதனால் காலை நேரங்களில் பணிக்கு செல்வோர், கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகளுக்கு மிகவும் சிரமம் அடைவதாக அவர்கள் கூறினர்.

இது குறித்து தாராபுரம் நகராட்சி அலுவலகம் மற்றும் 13-வது வார்டு திமுக கவுன்சிலர் சீனிவாசன் இடம் அப்பகுதி பொதுமக்கள் புகார் கொடுத்தனர். ஆனால் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.



இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பெண்கள் இன்று கடும் சுட்டெரிக்கும் கத்திரி வெப்பத்தில் காலி குடங்களுடன் தாராபுரம் புறவழி சாலைக்கு செல்லும் வழியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.



இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தாராபுரம் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தேர்தல் நேரத்தில் மட்டுமே வந்து எங்களிடம் வாக்கு சேகரித்து விட்டு செல்லும் திமுக கவுன்சிலர் எங்கள் குறைகளை கேட்பதில்லை எனவும், அதே நேரத்தில் அப்பகுதியில் சாக்கடைப் பணிகள் நடைபெற்று முடிந்தது.



அந்த சாக்கடையை மேடு, பள்ளமாக, கட்டியதில் சாக்கடை நீர் வீடுகளுக்குள் புகுந்து செல்கிறது. சாக்கடையை கட்டிய ஒப்பந்ததாரர் தரமற்ற முறையில் சாக்கடையை கட்டியதால் இந்த விபரீதம் ஏற்பட்டுள்ளதாகவும், தங்கள் பகுதியில் உப்பு தண்ணீருக்காக அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறு மூலம் சின்டெக்ஸ் தொட்டிக்கு தண்ணீர் கொடுப்பதில்லை எனவும், குடிநீர் மற்றும் உப்பு தண்ணீர் கூட வருவதில்லைஎனவும் அவர்கள் புகார் தெரிவித்தனர்.

எனவே, தண்ணீர் வருவதற்கு நடவடிக்கை எடுத்து சாக்கடை பணிகளை சரி செய்ய வேண்டும் என போலீசாரிடம் கோரிக்கை வைத்தனர்.இதற்கு இன்ஸ்பெக்டர் ரவி துறை சார்ந்த அதிகாரிகளிடம் தெரிவித்து முறையாக குடிநீர் கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அதனால் பெண்கள் சாலை மறியல் கைவிட்டு கலைந்து சென்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...