உடுமலை நகர அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

நகரச் செயலாளர் யு.ஜி.கே சற்குணசாமி தலைமையில் நடைபெற்ற நீர்மோர் பந்தல் திறப்பு விழாவில், பொதுமக்களுக்கு தர்பூசணி, பழங்கள் மற்றும் நீர்மோர் ஆகியவை வழங்கப்பட்டன.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பேருந்து நிலையம் அருகில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உத்தரவுக்கு இணங்க உடுமலை நகர அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நகரச் செயலாளர் யு.ஜி.கே சற்குணசாமி தலைமையில் நடைபெற்றது. நிகழ்விற்கு திருப்பூர் புறநகர் மாவட்ட கழக செயலாளர் T.T.காமராஜ் கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி நீர் மோர் பந்தலை துவக்கி வைத்தார்.



தர்பூசணி, பழங்கள் மற்றும் நீர்மோர் பொது மக்களுக்கு வழங்கப்பட்டன. திருப்பூர் புறநகர் மாவட்ட இணை செயலாளர் கிருஷ்ணம்பாள், திருப்பூர் புறநகர் மாவட்ட அவைத்தலைவர் வெங்கடுபதி, உடுமலை சட்டமன்ற தொகுதி செயலாளர் ஜெயசீலன், குடிமங்கலம் மேற்கு ஒன்றிய செயலாளர் நாகராஜன், உடுமலை சட்டமன்றத் தொகுதி பொதுக்குழு ராஜ் பிரகாஷ், உடுமலை நகர பொருளாளர் லயன் நடராஜ், திருப்பூர் புறநகர் எம்ஜிஆர் மன்ற செயலாளர் பாலகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...