கோவை மேட்டுப்பாளையம் மாகாளியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா

தலைமை பூசாரி தட்சிணாமூர்த்தி, குண்டத்தில் மல்லிகை மலர்ச் செண்டை வீசி குண்டத்தில் இறங்கி நடந்து வந்தார். பின்னர், உதவி பூசாரிகள் குண்டம் இறங்கினர். அவர்களைத் தொடர்ந்து பக்தர்கள் குண்டத்தில் இறங்கி தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.


கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பாக்குக்கார வீதியில் அருள்மிகு மாகாளியம்மன் திருக் கோவில் உள்ளது. இக்கோவிலில் பிரம்மோற்சவ நிகழ்ச்சிகள் கடந்த மாதம் 23ஆம் தேதி கணபதி ஹோமம் பொரிச்சாட்டுதலுடன் தொடங்கியது. திருவிளக்கு பூஜை, அக்னி கம்பம் நடுதல், பேட்டை மகா மாரியம்மன் கோவிலில் இருந்து தீர்த்த குடம் எடுத்து வருதல், குண்டம் திறத்தல், நகைப்பெட்டி எடுத்து வருதல், அக்னி வளர்த்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதனைத் தொடர்ந்து இன்று (மே.8) குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியையொட்டி பவானி ஆற்றங்கரையில் இருந்து அம்மன் அழைத்து வருதல் நிகழ்ச்சியையொட்டி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மன் குதிரை வாகனத்தில் சப்பரத்தில் எழுந்தருளிய வண்ணம் தாரை தப்பட்டை முழங்க ஊர்வலமாக வந்து கோவிலை அடைந்தது.



அதன் பின்னர் குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி தொடங்கியது. தலைமை பூசாரி தட்சிணாமூர்த்தி கையில் வேல் எடுத்து குண்டத்தை வலம் வந்து பூஜை செய்தார். குண்டத்தில் மல்லிகை மலர்ச்செண்டை வீசி பயபக்தியுடன் அம்மனை மனதில் நினைத்து குண்டத்தில் இறங்கி நடந்து வந்தார்.

அவரை தொடர்ந்து உதவி பூசாரிகள் சுரேஷ் கோலக் கூடை எடுத்தும், மனோஜ் சக்தி கரகம் எடுத்தும், சுதர்சன் சிவன் கரகம் எடுத்தும் குண்டம் இறங்கினார்கள். அவர்களைத் தொடர்ந்து பக்தர்கள் குண்டத்தில் இறங்கி தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...