யூடியூபர் சவுக்கு சங்கரை மே 22ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க மதுரை நீதிமன்றம் உத்தரவு

கோவை சிறையில் 10 காவலர்கள் சேர்ந்து தன்னை தாக்கியதாகவும், கோவை சிறையில் தனக்கு பாதுகாப்பில்லை எனவும் மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சவுக்கு சங்கர் நீதிபதி செங்கமலச்செல்வத்திடம் தெரிவித்தார்.


கோவை: காவல்துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கடந்த 4ஆம் தேதி தேனி மாவட்டத்தில் வைத்து கோவை சைபர் கிரைம் போலீஸாரால் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். அப்போது கஞ்சா வைத்திருந்ததாக அவர் மீது மேலும் ஒரு வழக்கு பதியப்பட்டு மீண்டும் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில், மதுரையில் உள்ள போதைப்பொருள் தடுப்புப் பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்காக சவுக்கு சங்கர் இன்று (மே.8) ஆஜர்படுத்தப்பட்டார்.



நீதிபதி செங்கமலச்செல்வன் முன்னிலையில் வழக்கு விசாரணை நடைபெற்ற போது, கோவை சிறையில் 10 காவலர்கள் சேர்ந்து தன்னை தாக்கியதாகவும், கோவை சிறையில் தனக்கு பாதுகாப்பில்லை எனவும் சவுக்கு சங்கர் தெரிவித்தார்.

மேலும், மதுரை அல்லது தஞ்சை சிறைக்கு தன்னை மாற்றுமாறு கோரிக்கை விடுத்தார். மேலும் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான அறையில் தன்னை அடைத்து வைத்திருந்ததாகவும் சவுக்கு சங்கர் நீதிபதியிடம் தெரிவித்துள்ளார்.

அதற்கு பதிலளித்த நீதிபதி,வேறு சிறைக்கு மாற்றுவதற்கு எனக்கு அதிகாரம் இல்லை. ஆகவே சிறைத்துறைக்கு கடிதம் மூலமாக கோரிக்கை விடுத்து பரிகாரம் தேடிக் கொள்ளுங்கள் என கூறினார்.

பின்னர் இந்த வழக்கில் சவுக்கு சங்கரை மே.22 வரை காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து, கோவை சிறைக்கு சவுக்கு சங்கர் அழைத்து செல்லப்பட்டார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...