வால்பாறை அருகே நெடுங்குன்றத்தில் யானை தாக்கியதில் ரவி என்பவர் உயிரிழப்பு

உணவுப்பொருட்களை வாங்கிக்கொண்டு நெடுங்குன்றம் பழங்குடி கிராமத்திற்கு வனப்பகுதி வழியாக இரவு நேரத்தில் நடத்து சென்றபோது குட்டியுடன் வந்த யானை தாக்கியதில் ரவி என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. தற்போது மழை இல்லாததால் காட்டு யானைகள் குடியிருப்பு பகுதி அருகே தண்ணீர் குடிக்க வந்து செல்கின்றன.

இந்நிலையில் வால்பாறை அருகே உள்ள நெடுங்குன்றம் செட்டில்மெண்ட் பகுதியில் சுமார் 30 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். வனப்பகுதியில் வாழும் இவர்கள் உணவுப் பொருட்கள் வாங்குவதற்காக வால்பாறை வந்து செல்வது வழக்கம். நேற்று இரவு ரவி வயது 54 என்பவர் மற்றும் அவரின் உறவினர்கள் மூன்று பேர்கள் மொத்தம் நான்கு பேரும் வால்பாறை பகுதிக்கு வந்து உணவுப் பொருட்கள் வாங்கி விட்டு இரவு எட்டு முப்பது மணி அளவில், வில்லோனி எஸ்டேட் அரசு பேருந்தில் சென்று, அங்கிருந்து நெடுங்குன்றம் பழங்குடி கிராமத்திற்கு வனப்பகுதி வழியாக நடந்து சென்றுள்ளனர்.

அப்பொழுது கிராமத்தின் அருகே வனப்பகுதியில் இருந்து குட்டியுடன் வெளியேறிய 2 காட்டு யானைகள், இவர்களை விரட்டி உள்ளது. அப்பொழுது மூன்று பேர் மட்டும் யானையைப் பார்த்து ஓடிய நிலையில் ரவி என்பவர் ஓட முடியாமல் சென்று உள்ளார்.

அப்போது, அவரை காட்டு யானை தாக்கி அவரை கொன்றது. அருகில் உள்ளவர்கள் சத்தம் போட்டு காட்டு யானையை அப்பகுதியில் இருந்து விரட்டினர்.



இது குறித்து தகவல் அறிந்த வால்பாறை காவல்துறையினரும், வால்பாறை வனச்சரகர் வெங்கடேஷ் தலைமையிலான வனத்துறையினரும் நெடுங்குன்றம் செட்டில் மெண்டு பகுதிக்கு சென்று ரவியின் உடலை கைப்பற்றி வால்பாறை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் வனவிலங்கு தாக்கி பலியானவரின் குடும்பத்தினருக்கு முன் பணமாக 50 ஆயிரம் ரூபாயை வால்பாறை வனச்சரகர் வெங்கடேஷ் வழங்கினார். வனப்பகுதியில் யானை தாக்கி நபர் ஒருவர் பலியான சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...