உடுமலையில் 257 பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தார் ஆர்.டி.ஓ. ஜஸ்வந்த் கண்ணன்

பள்ளி வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள வேகக் கட்டுப்பாட்டுக் கருவி, கண்காணிப்புக் கேமரா, ஜிபிஎஸ் போன்ற பாதுகாப்பு சாதனங்களின் செயல்பாடுகள் பற்றி அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உடுமலை, மடத்துக்குளம் தாலுகாக்களில் செயல்பட்டு வரும் 29 தனியார் பள்ளிகளில் 257 வாகனங்கள் உடுமலை நேதாஜி மைதானத்துக்கு கொண்டு வரப்பட்டன.



அந்த வாகனங்களை உடுமலை ஆர்.டி.ஒ. ஜஸ்வந்த் கண்ணன், உடுமலை வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜ், மோட்டார் வாகன ஆய்வாளர் ஜெயந்தி ஆகியோர் ஆய்வு செய்தனர்.



ஆய்வின் போது பள்ளி பேருந்துகளின் படிக்கட்டுகள், தளம் மற்றும் இருக்கைகளின் உறுதித் தன்மை குறித்து சோதனை மேற்கொள்ளப்பட்டது.



மேலும் வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள வேகக் கட்டுப்பாட்டுக் கருவி, கண்காணிப்புக் கேமரா, ஜிபிஎஸ் போன்ற பாதுகாப்பு சாதனங்களின் செயல்பாடு பற்றி ஆய்வு செய்யப்பட்டது.



மேலும் விபத்துக் காலத்தில் உதவும் வகையில் முதலுதவிப் பெட்டி, தீயணைப்பு சாதனம் மற்றும் அவசர வழி ஆகியவை அமைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்தனர்.



மேலும் வாகனங்கள் முன்புறம் பின்புறம் ஏற்படும் விபத்துக்களை தவிர்க்க கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்த கேமரா பொருத்தப்பட்டு உள்ளதா எனவும் ஆய்வும் மேற்கொண்டனர்.



பின்னர் பள்ளி வாகனங்களின் ஓட்டுநர்களுக்கு வருவாய் கோட்டாட்சியர், போக்குவரத்து அலுவலர் போக்குவரத்து விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும் உட்பட பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார். இந்த ஆய்வின் முடிவில் 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் குறைபாடுகள் இருந்த வாகனங்கள் கண்டறியபட்டு அந்த குறைபாடுகளை சரி செய்து தகுதிச் சான்று பெரும் வரை பேருந்து இயக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டது.



இந்த ஆய்வின் போது உடுமலை தீயணைப்பு அலுவலர் லட்சுமணன் தலைமையிலான தீயணைப்புத்துறையினர் விபத்துக் காலத்தில் மீட்புப்பணிகள் மேற்கொள்ளும் வழிமுறைகள், தீ விபத்தின் போது செயல்பட வேண்டிய முறைகள் குறித்து ஓட்டுநர், நடத்துனர் மற்றும் பணியாளர்களுக்கு பயிற்சியளித்தனர்.

ஆய்வின் போது உடுமலை டிஸ்பி சுகுமாரன், வட்டார போக்குவரத்து அலுவலக கண்காணிப்பாளர்கள் அருணாச்சலம் மற்றும் தனியார் பள்ளி வாகனங்களின் ஓட்டுநர்கள், நடத்துனர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...