மறைந்த திமுக எம்.பி மு.ராமநாதனின் 5ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு - நிர்வாகிகள் மரியாதை

கோவை மாவட்ட திமுக அலுவலகத்தில் இன்று கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் Ex.எம்எல்ஏ, மு.ராமநாதனின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


கோவை: திமுக எம்.பி மு.ராமநாதன் 5-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, கோவை வடகோவையில் உள்ள, கோவை மாவட்ட திமுக அலுவலகத்தில், இன்று (மே.9) கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் Ex.எம்எல்ஏ அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.



இந்நிகழ்வில், கழக சொத்துப்பாதுகாப்புக்குழு துணைத்தலைவர் பொங்கலூர் நா.பழனிச்சாமி, த.பெ.தி.க. பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன், மாநகர் மாவட்ட அவைத்தலைவர், கோவை பாராளுமன்ற திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார், மாநகர் மாவட்ட துணைச் செயலாளர்கள் கோட்டை அப்பாஸ், கல்பனா செந்தில், மாநகர் மாவட்டப் பொருளாளர் எஸ்.எம்.பி.முருகன், LPF தொழிற்சங்க தலைவர் சு.பார்த்தசாரதி, தகவல் தொழில் நுட்ப அணி மாநில துணைச்செயலாளர் அ.தமிழ்மறை, கழக தீர்மானக்குழு உறுப்பினர் மு.ரா.செல்வராஜ், திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...