கோவை எம்.ஜி.ஆர். மார்க்கெட்டில் ஆக்கிரமிப்பு அகற்றம் - அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதம்

தங்களுக்கு முன் அறிவிப்பு எதுவும் கொடுக்காமல் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக நகர அமைப்பு அதிகாரிகளிடம் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் எம்.ஜி.ஆர். மார்க்கெட்டில் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை: கோவை சாய்பாபா காலனி மேட்டுப்பாளையம் சாலையில் எம்.ஜி.ஆர். மார்க்கெட் உள்ளது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான வியாபாரிகள் வந்து காய்கறிகளை விற்பனைக்காக வாங்கி செல்கின்றனர்.



இந்த மார்க்கெட் பகுதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி இன்று (09-05-2024) காலை 10 மணியளவில் பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் அதிகாரிகள் தொடங்கினர்.



அப்போது அங்கு வந்த வியாபாரிகள் தங்களுக்கு முன் அறிவிப்பு எதுவும் கொடுக்காமல் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக அங்கு வந்த நகர அமைப்பு அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது அங்கிருந்து அதிகாரிகள் முறையாக நோட்டீஸ் கொடுத்து ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடங்குகிறது என்று தெரிவித்தனர். அதற்கு எங்களுக்கு அது போன்ற நோட்டீஸ் எதுவும் கொடுக்கவில்லை என்று வியாபாரிகள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...