உடுமலையில் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி துவக்கம் - 24 அணிகள் பங்கேற்பு

இன்று நடைபெற்ற முதல் போட்டியில் காந்திகிராமம் பல்கலைக்கழக அணியும், தாராபுரம் கூடைப்பந்து அணியும் மோதின. தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 80-82 என்ற புள்ளிகள் கணக்கில் காந்திகிராமம் பல்கலைக்கழகம் வெற்றி பெற்றது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை நேதாஜி விளையாட்டு மைதானத்தில் உடுமலை கூடைப்பந்து அகடாமி சார்பில் மாநில அளவிலான கூடை பந்து போட்டி இன்று துவங்கியது. சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 24 அணிகள் கலந்து கொண்டன. இன்று நடைபெற்ற முதல் போட்டியில் காந்திகிராமம் பல்கலைக்கழக அணியும், தாராபுரம் கூடைப்பந்து அணியும் மோதின. தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 80-82 என்ற புள்ளிகள் கணக்கில் காந்திகிராமம் பல்கலைக்கழகம் வெற்றி பெற்றது.



இரண்டாவது போட்டியில் கொங்குநாடு கூடைப்பந்து அணியும், பொள்ளாச்சி கூடை பந்து அணியும் மோதின. இதில், 51- 61 என்ற புள்ளி கணக்கில் பொள்ளாச்சி கூடைப்பந்து கழகம் அணி வெற்றி பெற்றது. மூன்றாவது போட்டியில் ராயல் கூடை பந்து கழகம் அணியும் வத்தலகுண்டு கூடை பந்து அணியும் மோதியது.

இதில் 76 -67 என்ற புள்ளி கணக்கில் ராயல் கூடை பந்து கழகம் அபார வெற்றி பெற்றது முதல் நாள் துவக்க விழா போட்டிகளில் திருப்பூர் மாவட்ட விளையாட்டு இளைஞர் நலன் அலுவலர் ரகுகுமார், யூகேபி முத்துக்குமாரசாமி, ஆர்.விஜி ஸ்போர்ட்ஸ் அகாடமி ஜூலியா சந்தோஷ், உடுமலை மார்டூரி வசந்தகுமார், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் மகேந்திரன், உடுமலை கூடைப்பந்து கழகம் விஜயபாண்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...