பொள்ளாச்சி மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பு குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சித் தலைவரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான கிராந்தி குமார் பாடி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கேத்தரின் சரண்யா ஆகியோர் வாக்கு என்னும் மையத்தில் பாதுகாப்பு குறித்தும், கண்காணிப்பு கேமராக்கள் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர்.


கோவை: பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்கு இயந்திரங்களை பொள்ளாச்சி உடுமலை சாலையில் உள்ள மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் உள்ள வாக்கு என்னும் மையத்தில் மூன்று அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.



இந்த நிலையில் கோவை மாவட்ட ஆட்சித் தலைவரும், மாவட்ட தேர்தல் அலுவலர், கிராந்தி குமார் பாடி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கேத்தரின் சரண்யா ஆகியோர் சென்று வாக்கு என்னும் மையத்தில் பாதுகாப்பு குறித்தும், கண்காணிப்பு கேமராக்கள் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர்.



அப்போது அங்கு பாதுகாப்பில் இருந்த காவல்துறையினரிடம் பாதுகாப்பு குறித்து கேட்டிருந்த அதிகாரிகள், கண்காணிப்பு கேமராக்கள் அனைத்தும் சரியாக பயன்பாட்டில் உள்ளதா என்பதையும் ஆய்வு செய்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...