கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் போலீசாருக்கு முதலுதவி செய்வது குறித்து பயிற்சி வகுப்பு

மாரடைப்பு, சாலை விபத்து போன்ற நிகழ்வுகளின் போது உடனடியாக பொது மக்களுக்கு முதலுதவி செய்து உயிரை காப்பாற்றுவதோடு அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பது வரை அனைத்து பயிற்சிகளும் காவலர்களுக்கு வழங்கப்பட்டது.


கோவை: கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் மாநகர ஆயுதப்படை காவலர்களுக்கான முதலுதவி சிகிச்சை பயிற்சி முகாம் வாரம் ஒரு முறை என நான்கு வாரங்கள் நடைபெற உள்ளது.



அதன்படி கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் இன்று (மே.9) நடைபெற்ற முதலுதவி பயிற்சி முகாமில் ஆண், பெண் என சுமார் 180 க்கும் மேற்பட்ட காவலர்கள் கலந்து கொண்டனர்.



அந்த காவலர்களுக்கு தனியார் தன்னார்வ அமைப்பு சார்பில் பயிற்சிகள் வழங்கப்பட்டது. குறிப்பாக மாரடைப்பு, சாலை விபத்து போன்ற நிகழ்வுகளின் போது உடனடியாக பொது மக்களுக்கு முதலுதவி செய்து உயிரை காப்பாற்றுவதோடு அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பது வரை அனைத்து பயிற்சிகளும் வழங்கப்பட்டது.



அண்மையில் மாநகர ஆயுதப்படையில் புதிதாக காவலர்கள் இணைந்துள்ளதால், அவர்கள் பயன் பெறும் வகையிலும், அவசர காலத்தில் எவ்வாறு விரைந்து முதலுதவி செய்ய வேண்டும் என்பது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...