ரூ.20 லட்சம் மதிப்பிலான சொத்துக்கள் அபகரிப்பு – கணவன் மீது கோவை மாநகர போலீஸ் கமிஷனரிடம் மனைவி புகார்

கணவரும், வக்கீலுமான செந்தில்குமார் தன்னிடம் இருந்து 50 பவுன் தங்க நகைகள் மற்றும் 20 லட்ச ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அபகரித்து விட்டதாக பாதிக்கப்பட்ட மனைவி கோவை மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகாரில் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



கோவை: கோவை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் அனுபமா (38). இவருக்கும் தேவ்குமார் மிஸ்ரா என்பவருக்கும் 2004 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக 2008 ஆம் ஆண்டு தேவ்குமார் மிஸ்ராவிடம் இருந்து அனுபமா விவாகரத்து பெற்றார். தேவ்குமார் மிஸ்ரா வரதட்சணையாக அனுபமாவிடம் இருந்து வாங்கி இருந்த நகைகளை விற்று கோவை வடவள்ளி பகுதியில் இடம் வாங்கி இருந்தார். இந்த இடத்தை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அனுபமா பெற முயற்சி செய்தார்.

அந்த நேரத்தில் கோவை ரேஸ்கோர்ஸை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் தான் வக்கீல் என்றும், இது போன்ற பிரச்சனைகளை நீதிமன்றத்திற்கு வெளியே வைத்து முடித்து தருவதாகவும் கூறி இருக்கிறார். இதைத் தொடர்ந்து அனுபமாவும் வக்கீல் செந்தில்குமாரும் பழகி வந்தனர். அப்போது செந்தில் குமார் அனுபமாவை காதலிப்பதாகவும் தன்னுடைய மனைவி கார்த்திகேயனியை விவாகரத்து செய்து தனியாக வசித்து வருவதால் திருமணம் செய்து கொள்ளலாம் எனவும் கூறி இருக்கிறார்.



இதை தொடர்ந்து கடந்த 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் தேதி சரவணம்பட்டி கரட்டு மேடு முருகன் கோவிலில் வக்கீல் செந்தில்குமாரும், அனுபமாவும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு அனுபமா பெயரில் உள்ள பல கோடி ரூபாய் சொத்துக்களை தனக்கு தர வேண்டும் என செந்தில்குமார் கேட்டுள்ளார். அனுபமா தர மறுக்கவே அவர் வீட்டை விட்டு வெளியேற்றினார். பின்னர் சில நாட்கள் கழித்து அனுபமாவை சமாதானப்படுத்தி மதுரை அழகர் கோவில் மீண்டும் திருமணம் செய்து கோவை நஞ்சுண்டாபுரம் பகுதியில் உள்ள தனியார் அபார்ட்மெண்டில் வசித்து வந்தனர்.

சில நாட்கள் கழித்து வக்கீல் செந்தில்குமார் ஏழரை கோடி பணம் தந்தால் மட்டுமே சேர்ந்து வாழ்வேன் என கூறியிருக்கிறார். இதற்கிடையே செந்தில்குமாரின் அலுவலகத்தில் பணிபுரியும் மற்றொரு பெண்ணுடன் அவருக்கு கள்ளத் தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது பற்றி அறிந்த அனுபமா தனது கணவர் செந்தில்குமார் இடம் கேட்டுள்ளார். அப்போது அந்தப் பெண்ணை அவர் திருமணம் செய்ய இருப்பதாக கூறியிருக்கிறார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அனுபமா தனது கணவர் செந்தில் குமார் குறித்து விசாரிக்க தொடங்கினார். அப்போது 2022 ஆம் ஆண்டு தான் செந்தில்குமார் மதுரை நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்ற விபரம் தெரியவந்தது. ஏற்கனவே விவாகரத்து ஆனதாக கூறி தன்னை திருமணம் செய்து மோசடி செய்ததாக அனுபமா வக்கீல் செந்தில்குமாரிடம் வாக்குவாதம் செய்தார்.



இதை தொடர்ந்து மீண்டும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மதுரையில் உள்ள தனது உறவினர்கள் முன்னிலையில் மீண்டும் தாலி கட்டி செந்தில் குமாரும், அனுபமாவும் மீண்டும் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் கோவைக்கு வந்த போது வீட்டிற்கு அழைத்துச் செல்லாமல் ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் அனுபமாவை தங்க வைத்தார். வீட்டிற்கு அழைத்து செல்லாததால் அனுபமா புறப்பட்டு தனது வீட்டிற்கு சென்று உள்ளார். அப்போது வீட்டில் நண்பர்களுடன் செந்தில்குமார் மது அருந்திக் கொண்டு இருந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அனுபமா இது குறித்து தனது கணவர் வக்கீல் செந்தில்குமாரிடம் கேள்வி எழுப்பி உள்ளார்.

அப்போது செந்தில் குமார் தனது மனைவி அனுபமாவை அங்கு இருந்து துரத்திவிட்டு உள்ளார். அப்போது அருகில் இருந்தவர்கள் ராமநாதபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது செந்தில் குமார் தனது மனைவி அனுபமாவை யார் என தெரியாது என்றும் கூறியிருக்கிறார். அப்போது இரவு நேரமானதால் அனுபமாவை அங்கு இருந்து சென்று விட்டு மீண்டும் மறுநாள் போலீஸ் ஸ்டேஷனுக்கு வருமாறு கூறினர்.

பின்னர் அனுபமா கோவை மாநகர போலீஸ் கமிஷனரை சந்தித்து புகார் மனு அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால் விசாரணைக்கு செந்தில்குமார் வராததால் அனுபமா மீண்டும் மதுரைக்கு சென்று போலீஸ் கமிஷனரையும், கலெக்டரையும் சந்தித்து புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் செந்தில்குமாரை அழைத்து விசாரணை நடத்தினர்.

கடந்த நவம்பர் மாதம் கோவை மாநகர போலீஸ் கமிஷனரிடம் அளித்த புகாரின் பேரில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் மீண்டும் அனுபமா கோவை மாநகர போலீஸ் கமிஷனரை சந்தித்து புகார் அளித்து உள்ளார். வக்கீல் செந்தில்குமார் தன்னிடம் இருந்து 50 பவுன் தங்க நகைகள் மற்றும் 20 லட்ச ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அபகரித்து விட்டதாகவும் புகாரில் அனுபமா கூறியுள்ளார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...