தனியார் வேளாண்மை கல்லூரிகளின் தன்னிச்சையான செயல்பாடுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

டாக்டர். கு.பலராமன் என்பவர் தேனி மாவட்டம், குள்ளபுரம், வைகை அணை என்னும் இடத்தில் வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியை 2010 ஆம் ஆண்டு முதல் நடத்தி வருகிறார். இக்கல்லூரிக்கு ஆறு மாத காலத்திற்குள் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் இணைப்புக்குத் தேவையான, மாணவ மாணவியரின் பயன்பாட்டுக்கான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்த வேண்டுமென்றும், மாணவ மாணவியர் சேர்க்கையில் அரசு மற்றும் பல்கலைக்கழகம் குறிப்பிட்டுள்ள  நடைமுறையைப் பின் பற்ற வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஆரம்பத்தில் 60 மாணவ மாணவியர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இக்கல்லூரிக்கு 2011 ஆம் ஆண்டில் சிறப்பு இனமாக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் குறிப்பிடும் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டுமென்ற நிபந்தனைக்குட்பட்டு மாணவ மாணவியர் சேர்க்கை எண்ணிக்கை 60லிருந்து 120 ஆக உயர்த்தப்பட்டது.

ஆனால், கல்லூரி 7 ஆண்டுகள் முடிவுற்ற நிலையிலும் இதுவரை மாணவ, மாணவியரின் பயன்பாட்டுக்கான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தவில்லை. கல்லூரி அளித்த உறுதி மொழிகளையும் கடைப்பிடிக்கவில்லை.

எனவே கல்லூரி நிர்வாகத்திற்கு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வசதிகள் நிறைவேற்றப்படவில்லை எனக் குறிப்பிட்டு 30-03-2016 ஆம் நாளில் பல்கலைக்கழகத்தின் இணைப்பை விலக்கிக் கொள்வதற்காக காரணம் கோரும் அறிவிப்பை சார்வு செய்தது.

காரணம் கோரும் அறிவிப்புக்கு பதில் அனுப்புவதற்கு பதிலாக கல்லூரி 13-04-2016 யில் சென்னை உயர்நீதி மன்றத்தில் ரிட் மனுவினைத் தொடர்ந்து, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நடவடிக்கைகளுக்குத் தடைகளை ஏற்படுத்தியது.

மாணவ மாணவியரின் பயன்பாட்டுக்கான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தத் தவறியதன் காரணமாக, 03-07-2016, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் கல்விக் குழு, நிலைக்குழுவின் பரிந்துரை மற்றும் மதிப்பீட்டு அறிக்கை ஆகியவற்றை ஏற்று, பல்கலைக்கழகம் மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை 2016- 2017 முதல் 120லிருந்து 60 ஆகக் குறைத்தது.

இதனை எதிர்த்து கல்லூரி, சென்னை உயர்நீதி மன்றத்தில், ரிட் மனு தொடர்ந்ததில் 12-07-2016 அன்று உயர்நீதி மன்றம் ரிட் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.  இருப்பினும், கல்லூரி நிர்வாகம் தன்னிச்சையாக நிர்வாக ஒதுக்கீட்டின்கீழ் 21 மாணவர்களை கூடுதலாக சேர்த்துக்கொண்டது. மேலும், கல்லூரி நிர்வாகம், உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்து 01-09-2016ல் சாதகமான உத்தரவு பெற்றது.  

இந்த உத்தரவை எதிர்த்து, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் இந்திய உச்ச நீதி மன்றத்தில் சிறப்பு விலக்கு மனு தொடர்ந்ததில், உச்சநீதி மன்றம் கல்லூரியில் ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளவும் ஆய்வின் போது தெரிவிக்கப்படும் வசதிக் குறைபாடுகளை எவ்வளவு காலத்திற்குள் சரிசெய்யப்படும் என்பது பற்றி கல்லூரி நிர்வாகம் ஆய்வுக் குழுவின் முன்பாகத் தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இதன் பின்னரும் அந்த தனியார் வேளாண்மை கல்லூரி நிர்வாகம் மாணவ மாணவியருக்குத் தேவையான வசதிகளை முழுமையாக ஏற்படுத்தவில்லை. இதன் காரணமாக உச்ச நீதிமன்றம் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், அக்கல்லூரியை 12 வார காலத்திற்குள் ஆய்வு செய்ய வேண்டுமென்றும், இக்காலத்திற்குள் கல்லூரி நிர்வாகம் கல்லுரியில் உள்ள வசதிக் குறைபாடுகளை நீக்க வேண்டுமென்றும், அவ்வாறு குறைபாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டிருப்பின், பல்கலைக்கழகம் குறைக்கப்பட்ட மாணவர் எண்ணிக்கைக்கு 2017- 2018 ஆம் ஆண்டுக்கு இணைப்பு அளிக்கலாம் எனவும் தெரிவித்தது.

மேலும், ஏற்கனவே அனுமதியின்றி கூடுதலாகச் சேர்க்கப்பட்டுள்ள 21 மாணவ மாணவியர்களை, இணைப்பு அளிக்கப்படும் நேர்வில் அடுத்த கல்வி ஆண்டான 2017 - 2018 ஆண்டில் சேர்த்துக் கொள்ளலாம் என்றும் அவர்களது கல்வியாண்டு 2017- 2018 ஆம் ஆண்டு முதல் துவக்கப்படும் என்றும் அவர்கள் ஏற்கனவே கல்லூரி நிர்வாகத்தால் சேர்த்துக் கொள்ளப்பட்டு கல்வி பயின்றதன் அடிப்படையில் எந்தவிதமான கோரிக்கையையும் சலுகையையும் பெறுவதற்கில்லை எனவும் கல்லூரி நிர்வாகத்தின் தன்னிச்சையான செயல்பாட்டிற்கு எதிராக உத்தரவிட்டுள்ளது.

Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...