அட்சய திருதியை முன்னிட்டு திருப்பூரில் உள்ள நகை கடைகளில் அலைமோதும் கூட்டம்

திருப்பூர் புது மார்க்கெட் வீதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட நகை கடைகளில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதி வருகிறது. ஒரு கிராம் தங்க நாணயங்கள் அதிக அளவில் விற்பனையாவதாக கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.


திருப்பூர்: அட்சய திரிதியை அன்று பொருட்கள் வாங்கினால் அது பல மடங்காக அதிகரிக்கும் என்ற நம்பிக்கை காரணமாக பொதுமக்கள் பலரும் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க இன்றைய நாளை தேர்ந்தெடுக்கின்றனர்.

குறிப்பாக தங்கம் வாங்கினால் மேன்மேலும் பெருகும் என்பதால் தங்கத்தில் இன்று முதலீடு செய்ய பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.



இதன் காரணமாக திருப்பூர் புது மார்க்கெட் வீதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட நகை கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இதனால் தங்க நகை கடைகளில் கூட்டம் நிரம்பி வருகிறது. குண்டு மணி தங்கமாவது வாங்க வேண்டும் என ஒரு கிராம் தங்க நாணயங்கள் அதிக அளவில் விற்பனையாவதாக கடை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...