கோவை ஆட்சியர் அலுவலகத்தில் திடீரென உடைந்து விழுந்த டைல்ஸ் கல் - இருவர் காயம்

ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொள்ள வந்தவர்கள் மீது திடீரென டைல்ஸ் கல் உடைந்து விழுந்ததில், ஒருவருக்கு தலையிலும், மற்றொருவருக்கு கையிலும் காயம் ஏற்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு டைல்ஸ் கல் பதிக்கும் பணி நடைபெற்றநிலையில் தற்போது உடைந்து விழுந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பழைய பில்டிங் உள்ளது. இங்கு விமான நிலைய நிலம் கையகப்படுத்துதல் துறை இயங்கி வருகிறது. இங்கு சிங்காநல்லூர் பகுதியில் நிலம் கையகப்படுத்துவது சம்பந்தமாக இன்று (மே.10) நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள, நில உரிமையாளர்களான செந்தில் குமார் மற்றும் தீபன் ரமேஷ் ஆகியோர் வந்தனர்.

கூட்டம் நிறைவு பெற்றதும் அங்குள்ள கை கழுவும் இடத்தில் இருவரும் கை கழுவ சென்றனர்.



அப்பொழுது சுவற்றில் பதிக்கபட்டு இருந்த டைல்ஸ் கல் ஒன்றன் பின் ஒன்றாக உடைந்து இருவரது மீதும் விழுந்தது. ஒருவருக்கு தலையிலும், மற்றொருவருக்கு கை பகுதியிலும் விழுந்ததில் இருவருக்கும் காயங்கள் ஏற்பட்டது.



பின்னர் சத்தம் கேட்டு ஓடி வந்த அரசு அதிகாரிகள் சில நிமிடங்களில் எதுவும் நடக்காதது போல மீண்டும் தங்களது அறைக்கு திரும்பினர். இதனால் அதிர்ச்சி அடைந்த இருவரும் செய்தியாளர்களை சந்தித்து, ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொள்ள வந்தோம். இங்கு டைல்ஸ் கல் உடைந்து காயம் ஏற்பட்டது. ஆனால் அதிகாரிகள் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. சில மாதங்களுக்கு முன்னர் தான் இந்த டைல்ஸ் கல் பதிக்கும் பணிகளுக்கு டெண்டர் விட்டு, வட மாநிலத்தவர்கள் டைல்ஸ் ஒட்டும் பணி மேற்கொண்டதாக தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...