கோவை மாவட்டத்தில் வன விலங்குகளின் தாகம் தணிக்க நீர் நிரப்பும் பணி

கோவை மாவட்டத்தில் கடும் வெயிலில் வனவிலங்குகளின் தாகம் தணிக்க வனத்துறையினர் தொட்டிகளில் நீர் நிரப்பும் பணி மே 10 அன்று ஆரம்பித்தனர்.


Coimbatore: கோவை மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களாக கடும் வெயில் நிலவி வந்தது. இதனால் பொதுமக்கள் வெயிலின் வெப்பத்தை தாங்க முடியாமல் மழை வரும் என எதிர்பார்த்தனர். கடந்த இரண்டு நாட்களாக கோவை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மழை பெய்தது.

இருந்த போதிலும், கோடை வெயிலால் வனப்பகுதியில் உள்ள நீர் நிலைகள் தண்ணீர் இன்றி வறண்டு காணப்பட்டது. இதனால் வனவிலங்குகள் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழையும் அபாயம் நிலவியது.



இந்த நிலையில் வனத்துறையினர் தன்னார்வ அமைப்பினர் உதவியுடன் மே 10 அன்று வனப்பகுதியில் கட்டப்பட்டுள்ள தண்ணீர் தொட்டிகளில் லாரிகளில் தண்ணீர் கொண்டு சென்று அந்தத் தொட்டியில் நிரப்பும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் வனவிலங்குகளின் தாகம் தணியும். மேலும், கோடை மழை மேலும் சில நாட்களுக்கு நீடித்தால் வனப்பகுதியில் உள்ள குட்டைகள் தண்ணீர் வரத்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...