கோட்டூரில் முறையாக குடிநீர் வழங்காத பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

கோட்டூர் பேரூராட்சியின் 6, 8, 10 மற்றும் 12 வது வார்டுகளுக்கு கடந்த ஐந்து நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்றும், வேண்டப்பட்டவர்கள் வார்டுகளுக்கு மட்டும் தினமும் குடிநீர் வழங்குகிறது என்றும் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் புகார் தெரிவித்தனர்.


கோவை: பொள்ளாச்சி அடுத்த கோட்டூர் பேரூராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. ஆழியார் ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்து சுத்திகரிக்கப்பட்டு பேரூராட்சியில் உள்ள 21 வார்டுகளுக்கும் விநியோகிக்கப்படுகிறது. இந்நிலையில் கோட்டூர் பேரூராட்சியின் 6, 8, 10 மற்றும் 12 வது வார்டுகளுக்கு கடந்த ஐந்து நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.



இந்நிலையில் முறையாக குடிநீர் வழங்க கோரி நேற்று இரவு இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கோட்டூர்-அங்கலக்குறிச்சி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும் போது, பேரூராட்சி நிர்வாகம் தங்களுக்கு வேண்டப்பட்டவர்கள் வார்டுகளுக்கு மட்டும் தினமும் குடிநீர் வழங்குகிறது. எங்கள் பகுதிக்கு ஐந்து நாட்கள் நாட்கள் ஆகியும் இதுவரை குடிநீர் வழங்கவில்லை. முறையாக குடிநீர் வழங்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றனர்.



இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த கோட்டூர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.



இதனால் பகுதியில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...