மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணையில் தமிழக அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆய்வு

பில்லூர் அணையின் நீர்மட்டம், நீர் இருப்பு மற்றும் நீர் வெளியேற்றம் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்த தமிழக அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, அணை தூர்வாரும் பணியினை துரிதப்படுத்தி முடிக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.


கோவை: கோவை மட்டுமின்றி திருப்பூர் மாவட்ட மக்களின் தாகத்தை தணிப்பதில் மேட்டுப்பாளையத்தில் அமைந்துள்ள பில்லூர் அணை முக்கிய பங்கு வகிக்கிறது. நீலகிரி மாவட்டத்தில் பெய்யும் மழையை நீர் ஆதாரமாக இந்த அணை கொண்டுள்ளது. தற்போது நிலவும் கடும் வறட்சி காரணமாக இந்த அணை வறண்டு காணப்படுகிறது.

100 அடி உயரம் கொண்ட இந்த அணையில் 60 அடிக்கு மேல் சகதி நிரம்பி காணப்படுகிறது. இந்த அணையை தூர்வார வேண்டும் என்று கோவை மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.



இந்த நிலையில் கோயம்புத்தூர் மாவட்டம் பில்லூர் அணையினை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா அவர்கள் நேற்று (மே.10) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு அணையின் நீர்மட்டம், நீர் இருப்பு மற்றும் நீர் வெளியேற்றம் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.



மேலும், அணையினை தூர்வாருதல் பணியினை துரிதப்படுத்தி முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார், மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், மாவட்ட வருவாய் அலுவலர் மோ.ஷர்மிளா, மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ், தமிழ்நாடு மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர் (பொ) பிரேம்குமார், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமை பொறியாளர் செல்லமுத்து, கோவை வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தன், கோவை மாநகராட்சி தலைமை பொறியாளர் அன்பழகன், உதவி ஆணையர் (பொ) இளங்கோவன், மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் சந்திரன் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் இருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...