சீரநாயக்கன்பாளையத்தில் மாரியம்மன் கோவில் திருவிழா - மாணவர்களுக்கு திமுகவினர் பரிசு

சித்திரை திருவிழாவில் நடைபெற்ற கல்வி உதவித்தொகை வழங்கும் விழாவில் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் பங்கேற்று மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கினார்.


கோவை: கோவை மாவட்டம் சீரநாயக்கன்பாளையம், மாரியம்மன் கோவில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, நேற்று (மே.10) மாரியம்மன் கோவில் மைதானத்தில், கோவை மாநகர் மாவட்டம், பாப்பநாயக்கன்புதூர்‌‌ பகுதி, 75வது வட்ட திமுக சார்பில், கோவை மாணவர்களின் பல்சுவை நிகழ்ச்சி, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த ‌மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.



இதில் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் ex.எம்எல்ஏ., கலந்து கொண்டு, மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கினார்.



இந்நிகழ்வில், முத்தமிழறிஞர் கலைஞர் வேடமணிந்து திருப்பத்தூர் சமரசம், கழகத் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் வேடமணிந்து சேலம் சையத் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...