கோவையில் கனமழை - வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி

கவுண்டம்பாளையம், இடையர்பாளையம், சாய்பாபா காலனி, கோவில் மேடு, வடவள்ளி, துடியலூர், பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் மிதமான மழையும், சில இடங்களில் கன மழையும் பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


கோவை: அக்னி நட்சத்திர வெயில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு தொடங்கியது. அக்னி நட்சத்திர வெயில் தாக்கம் எப்படி இருக்குமோ என்று பொதுமக்கள் சற்று அச்சத்துடன் இருந்த நிலையில் கடந்த 4 நாட்களாக கோவையில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.



இந்நிலையில், இன்று மாலை 4.30 மணி அளவில் கோவை புறநகர் பகுதிகளான கவுண்டம்பாளையம், இடையர்பாளையம், சாய்பாபா காலனி, கோவில் மேடு, வடவள்ளி, துடியலூர், பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் மிதமான மழை மற்றும் சில இடங்களில் கன மழை சிறிது நேரத்திற்கு பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...