துணை மின் நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வேலப்பநாயக்கன்வலசு ஊராட்சியில் விவசாயிகள் மனு

விவசாய நிலங்கள் வழியாக மின் வழித்தடம் அமைப்பதை கைவிட வலியுறுத்தி ராகுபையன்வலசு, சுந்தரவாடி மூத்த நாயக்கன் வலசு, மேலப்பன்நாயக்கன்வலசு, பாப்பா வலசு, மொட்டைகாளி வலசு, மயில்ரங்கம் ஆகிய கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் வேலப்பநாயக்கன்வலசு ஊராட்சியில் மனு கொடுத்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வெள்ளகோவிலில் பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி துணை மின் நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெறுவதாகவும், வேலப்பநாயக்கன்வலசு ஊராட்சியிலும் உரிய அனுமதி பெறாமலும் பணிகள் நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

வெள்ளகோவில், வேலப்பநாயக்கன் வலசு ஊராட்சி, ராகுபையன்வலசு, குருக்குபாளையத்தில் தனியாருக்கு சொந்தமான 14 ஏக்கர் நிலத்தை தனியார் நிறுவனம் வாங்கி உள்ளது. அந்த நிலத்தில் துணை மின் நிலையம் அமைக்கவும், இதர கட்டுமான பணிகளும் நடைபெற்று வருகின்றது. கரூர் மாவட்டத்தில் அந்த நிறுவனத்துக்கு சொந்தமான பல காற்றாலைகளில் இருந்து கிடைக்கும் மின்சாரம் ராகுபையன் வலசு துணைமின் நிலையத்துக்கு கொண்டுவரப்பட உள்ளது.

பின்னர் அங்கிருந்து 20 கிலோமீட்டர் தூரத்துக்கு உயர்மின் கோபுரம், மின் பாதை அமைத்து மூலனூர் துரம்பாடிக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதற்கு மின் கோபுரங்கள், உயர்மின் பாதைகள் பொதுச்சாலைகள் வழியாக அமையும் நிலையில் பல இடங்களில் விவசாய நிலங்களின் வழியாக அமைக்கப்பட உள்ளது. இதற்கு தொடக்கம் முதலே விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மேலும் ஊராட்சி நிர்வாகத்தின் அனுமதி ஏதும் பெறாமலேயே விதிமுறைகளை மீறி துணை மின் நிலைய கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதாக தெரிகிறது. இந்த நிலங்களில் வழியாக பிஏபி வாய்க்கால் செல்வதாகவும் அதற்கு பொதுப்பணி துறையிடமும் அனுமதி பெறாமலும், விவசாய நிலங்களில் உயர் அழுத்த மின் கோபுரங்கள், மின்பாதைகள் அமைத்தால் நிலத்தின் விலை மதிப்பு குறையும், நில உரிமை சிதறடிக்கப்படும், விவசாயம் பாதிக்கப்படும் என விவசாயிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

மேலும் விவசாயிகளின் முன் அனுமதியின்றி தனியார் நிறுவன ஊழியர்கள் நிலத்தை அளவீடு செய்வதற்கு விவசாயிகளை அச்சுறுத்தி உள்ளே நுழைந்து அத்துமீறல் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். விவசாயிகளின் நிலங்களில் மத்திய, மாநில அரசு உதவியுடன் சட்ட விதிமீறல் நடைபெற்று வருகிறது. விவசாய நிலங்கள் வழியாக மின் வழித்தடம் அமைப்பதை கைவிட வலியுறுத்தி நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.



இன்று வேலப்பநாயக்கன்வலசு ஊராட்சியில் ராகுபையன்வலசு, சுந்தரவாடி மூத்த நாயக்கன் வலசு, மேலப்பன்நாயக்கன்வலசு, பாப்பா வலசு, மொட்டை காளி வலசு, மயில்ரங்கம் ஆகிய கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பொதுமக்கள் கலந்து கொண்டு புகார் மனு கொடுத்து உள்ளனர். இதில் 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...