கோவை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 100 கிலோவுக்கு மேல் தங்கம் விற்பனை - தமிழ்நாடு தங்கம், வெள்ளி நகை சம்மேளனத்தின் தலைவர் தகவல்

கடும் விலை உயர்வால், இந்த ஆண்டு அட்சய திருதியையின் போது தங்கம் விற்பனை வழக்கத்தை விட 20 சதவீதம் குறைவாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கோவை மாவட்டத்தில் மட்டும் ஒரேநாளில் 100 கிலோவிற்கும் அதிகமாக தங்க நகைகள் விற்பனை ஆகியுள்ளது.


கோவை: இந்தியா முழுவதும் நேற்று மே.10 அட்சய திருதியை கொண்டாடப்பட்டது. இந்த நாளில் தங்க நகைகளை வாங்கினால் ஐஸ்வர்யம் பெருகும் என்று நம்புகின்றனர். கடும் விலை உயர்வால், இந்த ஆண்டு அட்சய திருதியையின் போது தங்கம் விற்பனை வழக்கத்தை விட 20% குறைவாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விற்பனை சிறப்பாக இருந்தது.

அதன்படி நேற்று மே.10 ஒரே நாளில் கோவை மாவட்டத்தில் 100 கிலோவிற்கும் அதிகமான தங்க நகைகள் விற்பனை ஆகியுள்ளதாக தமிழ்நாடு தங்கம் மற்றும் வெள்ளி நகை சம்மேளனத்தின் தலைவர் சபரி இன்று மே.11 கூறியுள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...