உடுமலை கோடந்தூர் மலைவாழ் கிராமத்தில் அடிப்படை வசதிகள் இல்லாமல் அவதிப்படும் மக்கள்..!

சின்னாறு சோதனை சாவடி பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் எனவும் இது குறித்து பல ஆண்டுகளாக மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் செய்யப்படவில்லை என்று தெரிவித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஆனைமலை புலிகள் காப்பகம் வனப்பகுதியில் அமைந்துள்ளது கோடத்தூர் மலைவாழ் கிராமம். இங்கு 300க்கும் மேற்பட்ட மலைவாழ் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மலை கிராமத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிக் கொடுக்கப்பட்ட வீடுகள் தற்பொழுது பல வீடுகள் இடிந்து சேதம் அடைந்தும் விரிசல் அடைந்தும் காணப்படுகின்றது.

இதனால் மழை வெயில் காலங்களில் மலைவாழ் மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் தற்பொழுது வனப்பகுதியில் கடுமையான வறட்சி நிலவி வருவதால் குடிநீருக்கு பொதுமக்கள் பல கிலோ மீட்டர் செல்ல வேண்டி உள்ளது.

மேலும், அவசர தேவைக்கு சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள உடுமலை அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டி உள்ளதால் கோடந்தூர் மலைவாழ் கிராமத்துக்கு அருகில் உள்ள சின்னாறு சோதனை சாவடி பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் எனவும் இது குறித்து பல ஆண்டுகளாக தமிழக முதல்வருக்கும், மாவட்ட ஆட்சித் தலைவர், அமைச்சர்களிடமும், மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் செய்யப்படவில்லை என மலைவாழ் மக்கள் தெரிவித்தனர். எனவே, தமிழக அரசு கோடந்தூர் மலை கிராமத்தில் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...